மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் பாஜக-வின் மூத்த உறுப்பின் சந்திரன் மித்ரா பாஜக-வில் இருந்து விலகினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

The Pioneer பத்திரிகையின் ஆசிரியரும், பாஜக-வின் சார்பில் இரண்டு முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டவருமான சந்திரன் மித்ரா பாஜக-வில் இருந்து விலகி திரினாமுல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று தனது பதவி விலகல் கடிதத்தினை பாஜக தலைவர் அமித்ஷா-விடம் அளித்த அவர், வரும் ஜூலை 21-ஆம் நாள் திரினாமுல் காங்கிரஸில் இணைவார் என தெரிகிறது.


வரும் ஜூலை 21-ஆம் நாள் மேற்குவங்கத்தில் திரினாமுல் காங்கிரஸ் சார்பில் ஹாயித் திவாஸ் நிகழ்ச்சி ஒருங்கினைக்கப் படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மமதா பேனர்ஜி தலைமை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு தன்னை கட்சியில் சந்திரன் மித்ரா இணைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி... பாஜக மூத்த தலைவர் அத்வானியின் நலன்விரும்பியான சந்திரன் மித்ரா, மோடி-அமித்ஷா தலைமையில் நடைப்பெற்றும் வரும் பாஜக செயல்களை விரும்பாத காரணத்தால் கட்சியில் இருந்து விலகியதாக தெரிகிறது.


மூத்த பத்திரிக்கையாளரான மித்ரா ஆகஸ்ட் 2003 - ஆகஸ்ட் 2009 ஆகிய காலகட்டத்தில் பாரளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2010-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.