பங்குச்சந்தைகளில் உயர்வு! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்படுகிறது.
பங்குச்சந்தைகளில் நேற்று பெரும் எழுச்சி காணப்பட்டது. சென்செக்ஸ் 3.75 சதவீதம் அளவுக்கு, அதாவது ஆயிரத்து 421 புள்ளிகள் நேற்று உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 3.69 சதவீதம் அளவுக்கு நேற்று உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் ஏற்றம் காணப்படுகிறது.
காலை வர்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு அதிகமாக உயர்ந்து 39 ஆயிரத்து 565 எனும் புதிய உச்சத்தை எட்டியது. நிஃப்டி 48 புள்ளிகளுக்கு அதிகமாகவும் உயர்ந்தது.