குடியரசு தின விழாவையொட்டி அசாம் மாநிலத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் மற்றும் அசாமில் பலத்த பாதுகாப்பையும் மீறி குடியரசு தின நாளான இன்று தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவங்களில் உயிர்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.


உல்பா தீவிரவாதிகளே இத்தாக்குதலுக்கு பின்னணியில் இருப்பதாகவும். தங்களது இருப்பை உணர்த்தும் விதமாகவே குடியரசு தினத்தன்று அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்.


திப்ருகார் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா இடத்திலிருந்து வெறும் 500 மீட்டர் தொலைவில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.