சவுமியா கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது என்று முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் கடந்த 2011-ம் ஆண்டு கொச்சியில் ஓடும் ரயிலில் சவுமியா என்ற இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கோவிந்தசாமி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.


சவுமியா கொலைவழக்கில் சுப்ரீம் கோர்ட் தவறு செய்துவிட்டது, மேலும் சுப்ரீம் கோர்ட் உரிய விசாரணை நடத்த குற்றவாளி தரப்புக்கு அவகாசம் அளிக்கமால் அவசர அவசரமாக விசாரித்து தவறான தீர்ப்பு வழங்கி விட்டது, இதனை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் இந்த வழக்கு தொடர்பாக எனது கருத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு எனக்கு நோட்டீஸ் அனுப்பி நவ.11-ம் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என்று மார்கண்டேய கட்ஜூ தனது  பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளர்.