ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி ( Sputnik V)  தடுப்பூசிக்கு ஏப்ரல் மாதத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்  (DCGI) அவசரகால பயன்பாட்டிற்கான அங்கீகாரத்தை வழங்கியது. இதை அடுத்து, கோவேக்ஸின், கோவிஷீல்ட் உடன் ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இப்போது போடப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்க அனுமதி கோரி இந்திய சீரம் நிறுவனம் (SII)  இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு aமைப்பிற்கு (DCGI) விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் எளியாகியுள்ளது.


புனேவை தளமாகக் கொண்ட நிறுவனம், ஆய்வுக்கு டி.சி.ஜி.ஐ (DCGI) யிடம் ஒப்புதல் கோரியுள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி (Sputnik V) தடுப்பூசியை தற்போது இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சீரம் நிறுவனம் ஜூன் மாதத்துக்குள் 10 கோடி தடுப்பூசிகளை வழங்குவதாக மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் தடுப்பூசியான நோவாவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கும் அனுமதி கேட்டுள்ள நிலையில், தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பிற்கும் அனுமதி கோரியுள்ளது.


ALSO READ | COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு?


ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு பிறகு வெளிநாட்டு தடுப்பூசிகளான ஃபைசர் (Pfizer) மற்றும் மாடர்னா (Moderna) ஆகியவை விரைவில் இந்தியாவிற்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த இரு தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு இழப்பீட்டு காப்பீடு வழங்கக்கூடும் கூறப்படுகிறது. இழப்பீட்டு காப்பீடு என்றால், தடுப்பூசி போட்டதன் காரணமாக பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டால் அந்த நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாது என்ற வகையிலான பாதுகாப்பை மத்திய அரசு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.


இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனமும் (Serum Institute of India - SII) , அதே போன்ற சட்டரீதியான பாதுகாப்பை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


ALSO READ | Health Tips: உங்களை ‘FIT’ ஆக வைத்திருக்கும் DIET ப்ளான்கள்..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR