COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு?

கோவிட் தடுப்பூசி செயல்திறன் தொடர்பான தரவுகளை சேகரித்து முழுமையாக ஆராய்ந்த பிறகு, கோவிஷீல்ட் (Covishield) ஒற்றை டோஸ் தடுப்பூசியாக பயன்படுத்தப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 31, 2021, 06:02 PM IST
COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு? title=

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) பற்றாக்குறை இருப்பதாக வெளியாகி வரும் தகவல்களுக்கு மத்தியில் 'சிங்கிள் ஷாட் தடுப்பூசி' பயன்பாடு தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவிட் -19 தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (SII) கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி எதிர்காலத்தில் ஒற்றை ஷாட் தடுப்பூசியாக தயாரிக்கப்படலாம்.

தற்போது, ​​கோவிஷீல்ட் (Covishield) மற்றும் கோவாக்சின் (Covaxin)ஆகிய இரு தடுப்பூசிகளும் இரண்டு டோஸ்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்றை டோஸ் தவிர 'Mixing Dose' குறித்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

கோவிஷீல்ட் ஒரு ஷாட் போதுமா?

ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson), ஸ்பூட்னிக் லைட் (Sputnik Light) மற்றும் கோவிஷீல்ட் (Covishield)  ஆகியவற்றின் தயாரிப்பில், ஒரே விதமான செயல்முறை மற்றும் சூத்திரத்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஜான்சன் & ஜான்சன் மற்றும் ஸ்பூட்னிக் லைட் ஆகியவை ஒற்றை டோஸ் தடுப்பூசிகள். அத்தகைய சூழ்நிலையில், அதே செயல்முறையிலிருந்து தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானதாக இருக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த ஆய்வின் முடிவுகள், ஒரு டோஸ் மட்டுமே போதும் என்பதற்கு சாதகமானதாக இருந்தால், தடுப்பூசிகளின் பற்றாக்குறை பெருமளவில் தீர்ந்து, நாட்டில் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி போடப்பட்டு விடும்.

தடுப்பூசியின் 'மிக்சிங் டோஸ்' குறித்து ஆராய்ச்சி

இது தவிர, தடுப்பூசியின் 'மிக்சிங் டோஸ்' குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊடக அறிக்கைகளில், இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைக் பயன்படுத்துவதன் மூலம் 'கலவை டோஸ்' குறித்த ஆய்வு ஒரு மாதத்தில் தொடங்கி இரண்டரை மாதங்களில் நிறைவடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட தடுப்பூசி தரவை மத்திய அரசு ஆய்வு செய்யும்.

இந்த ஆய்வு தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்டறிவதை எளிதாக்கும். அண்மையில், 20 பேருக்கு தற்செயலாக இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத நிலையில், இரண்டு வெவேறு தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

ALSO READ | COVID-19 Update: 24 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானோர் பாதிப்பு!!
 

 

Trending News