மம்தாவிற்கு பின்னடைவு; மேற்கு வங்க வன்முறை வழக்கை CBI விசாரிக்க உத்தரவு
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதிலும், ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால், பேஷண்ட் டெட் என்ற கதையாக, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜீ தோல்வி அடைந்தார்.
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதிலும், ஆபரேஷன் சக்ஸஸ், ஆனால், பேஷண்ட் டெட் என்ற கதையாக, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜீ (Mamatha Banerjee) தோல்வி அடைந்தார். இதை அடுத்து, அங்கே கொடும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள், எதிர் கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். படுகொலை மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் அரங்கேறின.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறை வழக்கில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது நடந்த கொலை, கற்பழிப்பு வழக்குகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
SIT குழு அமைக்கப்பட்டது
இது தொடர்பான வழக்கை விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நீதிமன்ற பிரிவு, மற்ற குற்றங்களை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. விசாரணைக் குழு தனது அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். இது உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியால் கண்காணிக்கப்படும்.
ALSO READ | மம்தா பானர்ஜிக்கு ₹5 லட்சம் அபராதம் விதித்தது கொல்கத்தா உயர்நீதிமன்றம்
மனித உரிமைகள் ஆணையம் மாநில அரசின் மீது குற்றச்சாட்டு
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைவர், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது நடந்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்த குழு, தனது அறிக்கையில், மம்தா பானர்ஜி (Mamatha Banerjee) அரசாங்கத்தை குற்றம் சாட்டியதோடு, கற்பழிப்பு மற்றும் கொலை போன்ற தீவிர குற்ற வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க பரிந்துரைத்தது. மேலும்மாநிலங்களுக்கு வெளியே வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். NHRC குழு அறிக்கை மற்ற வழக்குகளை நீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மூலம் விசாரிக்க வேண்டும் எனவு கூறியது. மேலும் நீதி கிடைக்கும், வழக்கை விசாரிக்கும் விரைவு நீதிமன்றங்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்களின் பாதுகாப்பிற்கான திட்டம் வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ALSO READ | TMC தொண்டர்களால் பற்றி எரியும் வங்காளம்; குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகுமா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR