பெண்களை திருமணம் செய்துகொளவதாக கூறி ஏமாற்றி உடலுறவு வைத்தால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய சூழ்நிலையில் எங்குபார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், பெண்களை திருமணம் செய்துகொளவதாக கூறி ஏமாற்றி உடலுறவு வைத்தால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சத்திஷ்கர் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உடலுறவு வித்ததாகவும். ஆனால், தற்போது அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த மருத்துவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து அவர் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


அந்த வழக்கில் மருத்துவருக்கு 7 ஆண்டுகளாக தண்டனை குறைக்கப்பட்டது. ஆனாலும், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி உறவு கொள்வது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பாலியல் பலாத்காரம் கிட்டத்தட்ட ஒரு கொலைக்கு சமமானது என்று கூறிய நீதிபதிகள், அதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு களங்கம் ஏற்படுவதுடன், மரியாதைக்கும் இழுக்கு ஏற்படுவதாக தெரிவித்தனர்.