காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் உதவியாளராக 71 வயதான பிபி மாதவன் எனும் நபர் இருந்துவருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இவர் மீது 26 வயதான இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள அந்த புகாரில், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்த தன்னுடைய கணவர், அவர் கடந்த 2020ஆம் ஆண்டு காலமாகிவிட்டதாகவும் இதைத் தொடர்ந்து, அவ்வலுவலகத்தில் தனக்கு வேலை வாங்கித் தருமாறு மாதவனை தான் தொடர்பு கொண்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.


பின்னர் வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் பேசி தன்னிடம் அவர் நேர்காணல் நடத்தியதுடன், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக மாதவன் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர், ஒரு நாள் தன்னை காரில் பலவந்தமாக அழைத்துச் சென்று ஃப்ளாட்டில் ஒன்றில் அடைத்து வைத்துத் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார்.



தான் அதற்கு உடன்பட மறுத்ததால் கோபமடைந்த அவர், தன்னை நடுத்தெருவில் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பட்டியல் சமூகத்தைச்  சேர்ந்த அப்பெண் அளித்த இந்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


மேலும்  படிக்க | மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு? - பாதியிலேயே வெளியேறிய முதலமைச்சர்?


 


இதனிடையே அப்பெண்ணின் புகாரை சோனியா காந்தியின் உதவியாளர் மாதவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்துள்ள அவர், சிலர் தன் மீது திட்டமிட்டு இவ்வகைப் புகார்களைக் கூறிவருவதாகத் தெரிவித்துள்ளார். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கிலேயே இவ்வாறு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | துப்பாக்கியால் சுட்டு திருமணச் சடங்கு! - நண்பனின் உயிரையே காவு வாங்கிய சம்பவம்- வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR