ஹைதராபாத்தில் பாலியல் ரீதியாக; ஏழு மாத கர்ப்பிணி இறப்பு!
ஹைதராபாத்தில் ஏழு மாத நிறைந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கற்பழிப்பில் இருந்து தன்னை காப்பாற்ற நினைத்து இறந்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ராவல்லி என்ற கிராமத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு முப்பத்தி ஐந்து வயதான நிறைந்த பெண், அவருடைய இளம் மகளுடன் டி.சி.எம் வேனில் வந்து கொண்டிருந்தார்.
திடீர்ரென வழியில், ஆண்கள் சிலர் வேனை மறைத்து அந்த பெண்னிடம் தொந்தரவு செய்து, அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
தன்னை காப்பாற்றுவதற்காக, முப்பத்தி ஐந்து வயது நிறைந்த அந்த பெண் தன்னுடைய வேனில் இருந்து குதித்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
பூதாகரமாக வெடிக்கம் ஓஸ்மானியா பல்கலை., மாணவர் தற்கொலை!
அதன் பின்பு அந்த வேன் டிரைவர் பெண்ணின் மகளை சாலையோரத்தில் கைவிட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவருடைய மகளை மீட்டனர்.
சிறுமி கொடுக்கப்பட்ட விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.