Budget 2024: எக்கச்சக்க எதிர்பார்ப்பில் மத்திய பட்ஜெட்... உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்
Budget 2024 Share Markets Trends: ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சற்று உயர்வுடன் தொடங்கியுள்ளன.
Budget 2024 Share Markets Trends In Tamil: இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். மேலும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தின் கடைசி பட்ஜெட்டாகும். நிர்மலா சீதாராமன் தற்போது தொடர்ச்சியாக ஆறாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இடைக்கால பட்ஜெட் என்றாலும் விவசாயிகள், மத்திய தர வர்க்கத்தினர், தொழில்முனைவோர் என பலரும் பட்ஜெட் அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | Budget 2024: கடந்த பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?
இந்நிலையில், ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சற்று உயர்வுடன் தொடங்கியுள்ளன. அறிவிப்புகள் வெளியாகும் நேரத்தில் இன்னும் கூட உயர்வு காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 248.4 புள்ளிகள் உயர்ந்து 72,000.51 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. தேசிய பங்குச்சந்தையின் வர்த்தக குறியீடான நிஃப்டி (Nifty) 62.65 புள்ளிகள் உயர்ந்து 21,788.35 இல் வர்த்தகத்தை தொடங்கியது.
பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?
இந்த பட்ஜெட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பெரிய செலவுகளை கொடுக்கும் நலத்திட்டங்களை தவிர்த்து, உட்கட்டமைப்பு ஆகியவற்றில் நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம், பட்ஜெட்டில் பண பற்றாக்குறையை குறைக்க முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய கொள்கை மாற்றங்கள், வருமான வரி சலுகை போன்ற பெரிய அறிவிப்புகளுக்கு இடைக்கால பட்ஜெட்டில் சாத்தியமில்லை என்றாலும், அரசின் மூலதனச் செலவினங்களின் விரிவாக்கம் மற்றும் நிதி ஒருங்கிணைப்பின் அளவு ஆகியவை சிரத்தையுடன் கவனத்தில் கொள்ளப்படும் என்று முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் (ICRA) தெரிவத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியின் பல்வேறு சேவைகளை வரும் பிப். 29ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது, அந்நிறுவனத்தின் பங்குகளும் சரிந்துள்ளன. அந்த வங்கிகளின் மேற்பார்வை போன்றவற்றில் பிரச்னை இருப்பதாக ஆர்பிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. Fintech நிறுவனத்தின் பேடிஎம் பங்குகள் சுமார் 20% சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ