FM Nirmala Sitharaman's Union Budget 2024 Updates in Tamil : 2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் புதிய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதனையொட்டி இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்கும் மத்திய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மக்களை நேரடியாக சென்றடைக்கூடிய வகையிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்களை குறி வைத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.