ராகுல் காந்தியை போல் தமிழகம் அல்லது கேரளாவில் போட்டியிட பிரதமர்மோடிக்கு துணிச்சல் உண்டா? என மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேசம் மாநிலம், அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகின்றார். அதே வேலையில் கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியிலும் கூடுதலாக போட்டியிடுகிறார்.


வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுகின்றார். இரு முக்கிய வேட்பாளர்கள் இத்தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்துள்ளது.


இதற்கிடையில், பெரும்பான்மை இனத்தவர்கள் அதிகம் வாழும் பகுதியில் போட்டியிட பயந்து ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு ஓட்டம் பிடித்ததாக பாஜக-வினர் விமர்சனம் செய்தனர். இதே கருத்தை பிரதமர் மோடியும் ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்தது ஏன்? என்று பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய முன்னாள் அமைச்சர் சசி தரூர், பிரதமர் மோடிக்கும் துணிச்சல் இருந்தால் ராகுல் காந்தியைப்போல் கேரளாவில் அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் அவருக்கு கேரளா அல்லது தமிழகத்தில் போட்டியிட துணிச்சல் அவருக்கு உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் இந்தியாவின் பிரதமர் என்ற பதவி, இந்திய மக்கள் அனைவருக்குமே பொதுவான பதவி என்பதை மறந்துவிட்ட மோடி, பாஜகவின் கொள்கைகளை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதில் அக்கறை காட்டி வந்துள்ளார் என குறிப்பிட்ட அவர், தற்போது ராகுல் காந்தியின் வருகையால் நமது நாட்டின் பிரதமர் தென்னிந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ளார் என்ற ஆர்வம் இங்குள்ள வாக்காளர்கள் மத்தியிலும் அண்டை மாநில மக்களிடையிலும் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.