நவராத்திரி அன்று காங்கிரஸ் கட்சியில் இணைகிறேன்: பாஜக எம்.பி. சத்ருகான் சின்ஹா
வரும் நவராத்ரி அன்று காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக பாஜகவின் எம்.பி சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) பாஜகவின் எம்.பி சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பீகார் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைவது பற்றியும், அவருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பீகாரர் காங்கிரஸ் தலைவர் சக்தி சிங் கோஹில், இன்று நடைபெற்ற சந்திப்பில் சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் கட்சியில் சேருவார் என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கட்சியில் சேர்ந்த பிறகு ஸ்டார் தலைவர்கள் வரிசையில் இடம் பெறுவார். நட்சத்திர பிரச்சாளராகவும் பணியாற்றுவார் எனக் கூறினார்.
மேலும் சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்பொழுது அவரை புகழ்ந்து பேசினார். முதலில் இருந்தே காந்தி குடும்பத்துடன் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறினார். பிரதமர் பதவிக்கு ராகுல் காந்தி தான் பொருத்தமாக இருப்பார் எனவும் சத்ருகன் சின்ஹா கூறியதாக சக்தி சிங் கோஹில் தெரிவித்தார். மேலும் வரும் நவராத்திரி அன்று காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
இன்று சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவருக்கு எந்த தொகுதி ஒதுக்குவது என்ற பேச்சுவாரத்தையில் உடன்பாடு ஏற்ப்படததால் தான், இன்று இணையாமல், வரும் நவராத்திரியின் போது இணைய போவதாக கூறியுள்ளார் எனக் கூறப்படுகிறது.