Kashmiri Pandit Killing: காஷ்மீரி பண்டிட் கொலை குறித்து சஞ்சய் ராவத்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காமில் காஷ்மீர் பண்டிட் ராகுல் பட் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மத்திய அரசை குறிவைத்து பேசியுள்ளார். அதாவது "இன்னும் எவ்வளவு காலம் பாகிஸ்தானை நோக்கி விரல்களை நீட்டுவோம் என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மீரில் பண்டிட்கள் பாதுகாப்பாக இல்லை:
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகும், காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியவில்லை, காஷ்மீரில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இல்லை. ஜம்மு காஷ்மீரில் நிலவும் இந்த ஸ்திரமற்ற சூழலுக்கு முடிவு கட்ட மத்திய அரசு கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றார். 


நாங்கள் பாகிஸ்தானை நோக்கி விரல் நீட்டவில்லை:
கடந்த 7 ஆண்டுகளில் மற்ற மாநிலங்களில் வசிக்கும் எத்தனை காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீருக்கு திரும்பியுள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை என்று சஞ்சய் ராவத் கூறினார். இது குறித்து உள்துறை அமைச்சகம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். நாங்கள் பாகிஸ்தானை நோக்கி விரல்கள் நீட்டவில்லை, காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்? என்றார்.


மேலும் படிக்க: இனவாத பதட்டத்தை மோடி அரசு தவிர்க்க வேண்டும் - எச்சரிக்கும் மெகபூபா முப்தி


காஷ்மீர் பண்டிட் கொலையைக் கண்டித்து போராட்டம்:
காஷ்மீர் பண்டிட் ராகுல் பட் கொல்லப்பட்டதற்கு எதிராக புத்காமில் போராட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இது தவிர கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. ராகுல் பட் கொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காஷ்மீர் பண்டிட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 



கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த கொலை செய்யப்பட்ட ராகுல் பட் மனைவி:
காஷ்மீர் பண்டிட் ராகுல் பட்டின் மனைவி, எங்களுக்கு அச்சுறுத்தல் இருந்தபோதிலும், தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கொலைக்கு 10 நிமிடங்களுக்கு முன்பு அவர் தனது கணவருடன் பேசியுள்ளார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் யாரும் இல்லை. அவர் செல்லும்போது வழியில் அனைவரும் அவருக்கு சல்யூட் அடித்தார்கள். அவர் இல்லாமல் புட்காம் முழுமையடையாது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டார் என வேதனையுடன் கூறினார்.


மேலும் படிக்க: ஜம்மு காஷ்மீர் : துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தல்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR