மும்பை: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது பாட்டி போன்ற ஒரு வலிமையான தலைவர் மற்றும் அதே அணுகுமுறை அவரிடம் காணப்படுகிறது என சிவசேனா கூறியுள்ளது. உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறை குறித்து யோகி அரசை விமர்சித்த போது பிரியங்கா காந்தி குறித்து சிவசேனா இவ்வாறு கூறியது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாமனா'வில் எழுதப்பட்ட தலையங்கத்தில், யோகி அரசாங்கத்தைப் பார்த்து, உத்தரப் பிரதேசம் பாகிஸ்தானில் இருக்கிறதா எனக்கேள்வி எழுப்பியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி (Chief Minister Charanjit Singh Channi) மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் (Chief Minister Bhupesh Baghel) ஆகியோர் லக்கிம்பூர் செல்வதற்கு தடை விதித்து தடுத்து நிறுத்தப்பட்டதால், அதைக்குறித்து கேள்விகளை எழுப்பிய போது சிவசேனா இவ்வாறு  கூறியுள்ளது.


மேலும் 'பிரியங்கா காந்தி காங்கிரஸின் பொதுச் செயலாளர். அவர்கள் மீது நீங்கள் அரசியல் தாக்குதல்கள் நடத்தப்படலாம். ஆனால் அவர் இந்திரா காந்தி போன்ற ஒரு சிறந்த தலைவரின் பேத்தியும் கூட. இந்திரா நாட்டுக்காக தியாகம் செய்து பாகிஸ்தானை இரண்டு துண்டுகளாகப் பிரித்தார். சட்டவிரோதமாக பிரியங்கா காந்தியை தடுத்து வைத்திருப்பவர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா கூறியுள்ளது. 


இதற்கிடையில், உ.பி. போலீஸ் பிரியங்கா காந்தியை விடுவித்தது. இது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க ராகுல் காந்தியுடன் லக்கிம்பூர் கெரிக்குச் செல்லவும் அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 


ALSO READ | Lakhimpur Kheri: கொல்லப்பட்ட விவசாயி உடலுக்கு நள்ளிரவில் நடந்த பிரேத பரிசோதனை


பிரியங்கா காந்தியின் குற்றம், அவர் உ.பி. அரசாங்கத்திடம் கேள்விகளைக் கேட்டதா என சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். பிரியங்கா காந்தியை அவரது பாட்டியுடன் ஒப்பிட்டு, அவர் ஒரு போராளி மற்றும் நாளைய தலைவர் என்று சிவசேனா சாமனாவில் கூறியுள்ளது. 


பிரியங்கா காந்தியின் அணுகுமுறை அவரது பாட்டி இந்திரா காந்தியைப் போன்றது என்று சிவசேனா தெரிவித்துள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை, பிரியங்கா காந்தி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சீதாபூரில் உள்ள பிஏசியின் விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். பிரியங்கா காந்தி நான் கைது செய்யப்பட்டேன். இது தொடர்பாக எஃப்ஐஆர் அல்லது நோட்டீஸ் கூட காட்டப்படவில்லை என்று கூறினார். இது மட்டுமல்லாமல், அவர் தனது வழக்கறிஞர்களை சந்திக்க கூட அனுமதிக்கப்படவில்லை. பல வழக்குகளில் வழக்கு பதிவு செய்து பிரியங்கா காந்தி உள்பட 11 பேரை உ.பி. காவல்துறையினர் கைது செய்தனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


ALSO READ | அம்மாவின் மருத்துவ செலவுக்கு உதவி கேட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR