மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து ஆட்சியமைக்க உள்ள நிலையில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சௌகான் தனது பதிவியினை ராஜினாமா செய்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியாக வெளியான முடிவுகளின் படி எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 


மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.



இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, தங்களது ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார். எனவே 114+2 சட்டமன்ற உறுப்பினர்களுடன் காங்கிரஸ் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.


இதனையடுத்து தற்போது அம்மாநிலத்தில் முதல்வராக இருக்கும் சிவராஜ் சௌகான் தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்த சிவராஜ், தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.


காங்கிரஸ் தலைமையில் அமையவுள்ள ஆட்சியில் யார் முதல்வர் பதவியினை ஏற்பார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று ஆட்சியில் முதல்வராக இருந்த சிவராஜ் சௌகான் இன்று தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்துள்ளார்.