சந்திரயான்-3 பயணிகளுக்கு வாழ்த்துகள்... சீரியஸாக பேசிய அமைச்சர் - சிரிக்கும் நெட்டிசன்ஸ்
Chandrayaan-3 Viral News: சந்திரயான்-3 விண்கலத்தில் பயணித்த பயணிகளுக்கு வாழ்த்துகள் என ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசிய வீடியோ நெட்டிசன்களிடம் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
Chandrayaan-3 Viral News: சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கிய வரலாற்று தருணத்தை கோடானகோடி மக்களும் கொண்டாடினர். அதே தருணத்தில், ராஜஸ்தான் விளையாட்டு அமைச்சர் அசோக் சந்த்னாவின் சந்திரயான் குறித்த அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.
ராஜஸ்தான் அமைச்சர் அசோக் சந்தனா, இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி பயணத்திட்டமான சந்திரயான்-3 விண்கலம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நாட்டின் 3ஆவது நிலவுப் பயணத்தைப் பாராட்டி, விண்கலத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
"நாம் வெற்றியடைந்து, சந்திரனில் பாதுகாப்பான தரையிறக்கத்தை அடைந்தால், பயணிகளுக்கு வாழ்த்துகள் சொல்ல விரும்புகிறேன். நமது தேசம் அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் மற்றொரு படியை எடுத்துள்ளது, இந்திய குடிமக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்" என அவர் கருத்து கூறினார். இந்த கருத்து தான் நெட்டிசன்களை சிரிப்பில் ஆழ்த்தியது. அவர் செய்தியாளர்களின் கேமராவின் முன்னிலை பேசிய அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
சந்திரயான்-3 என்பது ஆளில்லா நிலவு ஆராய்ச்சி விண்கலம் ஆகும். இது கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று வெற்றிகரமாக அதன் பயணத்திற்கு புறப்பட்டது. இந்த விண்கலம் ஆக. 23ஆம் தேதியான (புதன்கிழமை) நேற்று மாலை 6.04 மணிக்கு தரையிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முழு சந்திரயான் -3 பணியையும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானி குழு கையாளுகிறது, ஆனால் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் அமைச்சர் அசோக் சந்தனாவுக்கு இந்த உண்மை தெரியவில்லை.
மேலும் படிக்க | நிலவின் முதல் புகைப்படம்... ஆரம்பிக்கலாமா நிலவில் இருந்து கேட்கும் விக்ரம்
சந்திரயான்-3 விண்கலம் சந்திரனில் விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்றது என்று அவர் நினைத்து உள்ளார்.
ராஜஸ்தான் அமைச்சரின் கருத்து, இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க சந்திரன் பயணத்தின் வெளிச்சத்தில் கவனத்தை ஈர்க்கும் முயற்சியாக இருக்கலாம், ஆனால் இதுபோன்ற கவனக்குறைவான கருத்துடன், அவர் தனது கட்சியையும் அரசாங்கத்தையும் கேலிக்கு உள்ளாக்கிவிட்டார். அமைச்சர் இந்த பேச்சின் காரணமாக நெட்டிசன்களிடம் இருந்து பல கேலி எதிர்வினைகளை ஈர்த்தார். ஒரு பயனர் கேலிக்குரிய கருத்துடன், அவரை 'காங்கிரஸின் ரத்தினங்கள்' என்று அழைத்தார்.
இந்தியாவின் பெருமை
சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பின்னர், பிரக்யான் ரோவர் (ஊர்தி) நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டது. பிரக்யான் ஊர்தி இனி நிலவின் தென் துருவ மேற்பரபப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்கள் நிலவில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றது. அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக நிலவில் கால் பதித்த நாடுகளில் அமெரிக்கா, சோவியட் யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்கு பின் இந்தியா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் பயணம்
இஸ்ரோவின் நிலவு பயணத்திட்டமாக சந்திரயான் தொடங்கப்பட்டது. சந்திரயான் -1 திட்டம் அதன் இலக்கை அடைந்து வெற்றிக்கண்டது. அதன்மூலம், நிலவில் நீருக்கான சாத்தியக்கூறுகள் உறுதிசெய்யப்பட்டன. மேலும், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் அது பெரும் பங்கை ஆற்றியது. 2008-2009 ஆகிய ஆண்டுகளில் சந்திரயான்-1 விண்கலம் செயல்பட்டது.
தொடர்ந்து, சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவது நோக்கமாக கொண்டு 2019இல் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், தரையிறக்கம் சரியாக இல்லாமல், அத்திட்டம் அதன் இலக்கை நிறைவு செய்யவில்லை. இந்தியாவின் நிலவு ஆராய்ச்சி பயணத்தில் இது சற்று பின்னடைவு ஏற்படுத்தியிருந்தாலும், அடுத்த நான்கே ஆண்டுகளில் அதில் இருந்து பெரும் பாடத்தை கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சந்திராயன் 3! இந்தியர்களின் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்... பாராட்டிய பிரதமர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ