Badlapur Sexual Assault Accused Died: மும்பை அருகே இருக்கும் பத்லாபூர் நகரில் இரண்டு நான்கு வயது சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளி, போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றபோது போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு புறநகர் பகுதியில் இருக்கும் பத்லாபூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கொடூரமான குற்றச் சம்பவம் நடந்தேறியது. ஆக. 9ஆம் தேதி கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த நேரத்தில் மும்பை அருகே உள்ள இந்த பத்லாபூரில் 4 வயது சிறுமிகள் இருவரை, பள்ளியின் கழிவறையிலேயே ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


பத்லாபூர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 4 வயதான இரண்டு சிறுமிகள் காலைப் பொழுதில் கழிவறைக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு கழிவறையை சுத்தம் செய்து வந்த அக்சய் ஷிண்டே (23) எனும் ஒப்பந்த பணியாளர், இரண்டு சிறுமிகளையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அக்சய் ஷிண்டே கடந்த ஆக. 1ஆம் தேதி அன்று அந்த பள்ளியில் பணிக்கு சேர்ந்த நிலையில், ஆக. 17ஆம் தேதி அன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


மேலும் படிக்க | இனி அந்த வார்த்தையை பயன்படுத்த கூடாது.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!


கவனம் ஈர்த்த ரயில் மறியல்


குற்றஞ்சாட்டப்பட்ட அக்சய் ஷிண்டே கைதுசெய்யப்பட்டாலும் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதுபோன்ற குற்றச்செயல்களிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நூற்றுக்கணக்கானோர் கடந்த ஆக. 20ஆம் தேதி தானே அருகே உள்ள ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதை தொடர்ந்து, அரசியல் ரீதியிலும் இந்த வழக்கின் மீது அழுத்தம் அதிகமானது எனலாம். 


அப்படியிருக்க, குற்றஞ்சாட்டப்பட்ட அக்சய் ஷிண்டேவின் முதல் மனைவி போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னை கொடுமைப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தார். திருமணமாகி வெறும் ஐந்து நாள்களில் அக்சய் ஷிண்டேவை விட்டு அந்த பெண் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில், இன்று இந்த புதிய வழக்கில் விசாரணை மேற்கொள்ள தலோஜா சிறையில் இருந்து அக்சய் ஷிண்டேவை காவலில் எடுக்க பத்லாபூர் போலீசார் சென்றுள்ளனர்.


நடந்தது என்ன?


இன்று மாலை 6.30 மணிக்கு தானேவின் மும்ப்ரா பைபாஸ் சாலையில் அக்சய் ஷிண்டேவை சிறையில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென அக்சய் ஷிண்டே தப்பிக்க முயற்சித்துள்ளார் என கூறப்படுகிறது. அதாவது, அக்சய் ஷிண்டே அங்கிருந்த கான்ஸ்டபிளின் துப்பாக்கியை எடுத்து ஒரு காவலரை நோக்கி சுட்டுள்ளார். இதில் ஷிண்டேவிடம் இருந்து தற்காத்துக்கொள்ள காவலர் ஒருவரும் அவரை சுட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், அக்சய் ஷிண்டே படுகாயம் அடைந்துள்ளார். உடனே, அக்சய் ஷிண்டேவை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அக்சய் ஷிண்டேவின் உடல் தானே சத்ரபதி சிவாஜி மகாராஜ் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 



இச்சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில்,"அக்சய் ஷிண்டேவின் முன்னாள் மனைவி அளித்த புகாரின்பேரில், அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் விசாரணைக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் போலீஸ் அதிகாரி நிலேஷ் மோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். தற்போது நிலேஷ் மோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்காப்புக்காக போலீசார் எதிர் நடவடிக்கை எடுத்தனர். விசாரணைக்கு பிறகே கூடுதல் தகவல்கள் வெளியாகும்" என விளக்கமளித்தார்.



'தூக்கிலிட சொன்ன எதிர்க்கட்சிகள்...!'


துணை முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் கூறுகையில்,"அக்ஷய் ஷிண்டேவின் முன்னாள் மனைவி பாலியல் வன்கொடுமை புகார் அளித்ததால், போலீசார் வாரண்டுடன் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். போலீசாரின் துப்பாக்கியை பறித்து, போலீசார் மீதும், வானை நோக்கியும் ஷிண்டே சுட்டுள்ளார். தற்காப்புக்காக போலீசார் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 



மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்தவர்கள் பின்னர் அறிவிப்பார்கள், எங்களுக்கு கிடைத்த முதல் கட்ட தகவலின்படி அவர் இறந்துவிட்டார். எதிர்க்கட்சிகள் எல்லாவற்றிலும் கேள்விகளை எழுப்புகின்றன. அதே எதிர்க்கட்சி அவரை தூக்கிலிடச் சொன்னது. போலீசாரை தாக்கும்போது போலீசார் தற்காப்பு செய்ய மாட்டார்களா? இதன்மூலம் ஒரு பிரச்னையை உருவாக்குவது தவறு" என்றார். 


மேலும் படிக்க | இமாச்சல் காங்கிரஸ் அரசு கடன் வாங்கி சோனியா காந்தியிடம் கொடுக்கிறது: கங்கனா ரனாவத்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ