Delhi Crime News: டெல்லி மாளவியா நகரில் கல்லூரிப் பெண் ஒருவர் இன்று இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணான கமலா, நேரு கல்லூரி மாணவி கல்லூரி வளாகத்திற்கு வெளியே தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்னும் அடையாளம் காணப்படாத குற்றவாளி, தற்போது தலைமறைவாக உள்ளார். தெற்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.


தெற்கு டெல்லி மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே 25 வயது இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவரது உடல் அருகே இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. "முதற்கட்ட விசாரணையில் பெண்ணை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது,'' என, போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


"தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே 25 வயது இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர் தனது தோழியுடன் பூங்காவிற்கு வந்துள்ளார். இறந்தவரின் தலையில் காயங்கள் உள்ளன. அருகில் இரும்பு கம்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல்,” என்று தெற்கு டெல்லி டிசிபி சந்தன் சவுத்ரி கூறினார்.



கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் நடந்த இரண்டாவது கொலை சம்பவம் இது என்பது நினைவுக்கூரத்தக்கது. டெல்லியின் தாப்ரி பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் கட்டடத் தொழிலாளியின் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டார். உயிரிழந்த பெண் ரேணு என அடையாளம் காணப்பட்டது. அவரது வயது சுமார் 40 ஆகும். அவரது வீட்டின் அருகே தாக்குதல் நடத்திய நபர் அவரை சுட்டுள்ளார்.


ரேணுவை கொல்வதற்காக தாக்குதல் நடத்திய நபர் நடந்தே சம்பவ இடத்திற்கு வந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் ரேணுவை பாயிண்ட் பிளாங்க் ரேஞ்சில் இருந்து சுட்டார். அதன் பிறகு அவர் தலைமறைவானார். இருப்பினும், தாக்குதல் நடத்தியவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக பின்னர் செய்திகள் வந்தன.


மேலும் படிக்க | கணவன் கண் முன்னே மனைவியை பாலியல் வன்புணர்வு செய்த கந்துவட்டிக்காரன் - கொடூர சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ