அவளுடன் நெருக்கமாக இருந்ததே இல்லை... எனக்கு ஹெச்ஐவி - மும்பை காதலி கொலையில் திடுக் தகவல்
Mumbai Mira Road Murder: தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கவில்லை என உயிரிழந்த சரஸ்வதி, தன்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என விசாரணையில் மனோஜ் தெரிவித்துள்ளார்.
Mumbai Mira Road Murder: மும்பையில் சில தினங்களுக்கு முன்பு, லிவ்-இன் உறவில் இருந்த பெண் ஒருவரின் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில், அவரின் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியது.
அந்த பெண்ணின் உடல் பாகங்களை வெட்டிய காதலன் பெட்ஷீட், வாளிகளில் போட்டுவைத்திருந்ததை போலீசார் கண்டெடுத்தனர். அவர்களின் குடியிருப்பில் இருந்து வந்த துர்நாற்றத்தை அடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
திருப்தியாக வைத்திருக்கவில்லை
உயிரிழந்த பெண் 32 வயதான சரஸ்வதி வைத்யா என தெரியவந்தது. மேலும், அவரின் லிவ்-பார்ட்னரான 56 வயது மனோஜ் ரமேஷ் சானேவை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், சரஸ்வதியின் சில உடல் பாகங்கள் குக்கரில் வேக வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்தன. விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதிலும், தன்னை மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கவில்லை என உயிரிழந்த சரஸ்வதி, தன்னிடம் அடிக்கடி சண்டையிடுவார் என விசாரணையில் மனோஜ் தெரிவித்துள்ளார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், மனோஜின் இணைய தேடுலில், பல ஆபாச இணையதளங்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரால் ஆபாச தளங்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள இயலாததால், கைப்பற்றப்பட்ட காகிதத்தில் 7-8 ஆபாச தளங்களின் பெயர்களையும் மனோஜ் எழுதிவைத்துள்ளார் எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமச்சந்திரன் விஸ்வநாதன் யார்?
ஹெச்ஐவி நோய்
கைதாகியுள்ள காதலன் மனோஜ் ரேஷன் கடையில் பணியாற்றி வந்தார். விசாரணையில், சரஸ்வதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தான் அவரின் உடலை அப்புறப்படுத்தவே, அவரை வெட்டியதாகவும் மனோஜ் கூறியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், தனக்கு ஹெச்.ஐ.வி நோய் உள்ளது என்றும், இதுவரை சரஸ்வதியுடன் எந்த உடலுறவிலும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.
மனோஜ் ஆபாச தளங்களை எழுதிய காகிதத்தையும் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. 'திருப்தி அடையவில்லை' என்று வைத்யா தன்னிடம் புகார் அளித்ததை குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், வேறு எந்த பெண்ணையும் பார்க்கும்போது அது சரஸ்வதிக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் தேடல்
சரஸ்வதியின் உடலை அப்புறப்படுத்துவது குறித்து இணையத்தில் மனோஜ் தேடியுள்ளார். ஒரு உடலை அப்புறப்படுத்துவதற்கான வழிகளை சானே இணையத்தில் தேடியதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அவரது தொலைபேசியை ஸ்கேன் செய்தபோது, போலீசார் அவரது இணையதள தேடுல்களை ஆய்வு செய்தனர். ஜூன் 4ஆம் தேதி, அவர் வைத்யாவைக் கொன்றதாகக் கூறப்படும் நாளில், ஒரு உடல் சிதைந்து வாசனை வராமல் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது குறித்து மனோஜ் தேடியிருக்கிறார். பின்னர் அவர் உடலை பல பகுதிகளாக வெட்டி, துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க அவற்றை வேகவைத்ததாக கூறப்படுகிறது.
சரஸ்வதியின் பின்புலம்
சரஸ்வதியின் தாய், சகோதரிகள் அவரின் இளம் வயதிலேயே காலமாகிவிட்டனர். அவர்களின் தந்தை அவர்களைக் கைவிட்டுவிட்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் மேற்கு மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆஷ்ரம பள்ளியில் (ஆதரவற்றோருக்கான பள்ளி) 10 ஆம் வகுப்பு வரை படித்தார். 18 வயதிற்குப் பிறகு தனது உறவினர்களுடன் வசிக்க மும்பைக்கு வந்தார். மனோஜை சந்தித்த பிறகு, சரஸ்வதிக்கு அவர் விற்பனையாளர் வேலையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். அவர்கள் கடந்த மூன்றாண்டுகளாக அந்த வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர்.
ஜூன் 3ஆம் தேதி காலை சரஸ்வதி விஷம் சாப்பிட்டு இறந்துவிட்டதாகவும், அவரது மரணத்திற்கு தானே பொறுப்பேற்க நேரிடும் என்று அஞ்சி உடலை அப்புறப்படுத்த முடிவு செய்ததாகவும் மனோஜ் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்தில் இறந்த மகனின் உடலுக்காக காத்திருக்கும் தாய்!