ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... தனது முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசிய காதலி..!!!
ஆந்திராவின் கர்னூலில் முன்னாள் காதலன் மீது ஒரு பெண் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் பொதுவாக, பெண்கள் ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவத்தை தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆந்திராவின் கர்னூலில் முன்னாள் காதலன் மீது ஒரு பெண் ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்னூல் மாவட்டம் நந்தியால் மண்டலத்தில் உள்ள பெட்டா கோட்டலா கிராமத்தில் வியாழக்கிழமை 20 வயது பெண் ஒருவர் தனது முன்னாள் காதலன் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.
இருவரும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர் என்றும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்ட பெண் கூறுகிறார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு, தனது பெற்றோர் அவருக்காக ஒரு பெண் பார்த்து வைத்திருப்பதாகவும், அவளை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறினார் எனவும் அந்த பெண் கூறுகிறார்.
வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்ட அந்த காதலன், அவளுடன் வாழ மாட்டேன் என்று கூறி தன்னிடன் வந்ததாகவும் அந்த பெண் கூறுகிறார்.
தனது குடும்பத்தினர் தனக்காக பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறிய போது, ஆத்திரமடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தனது காதலன் மீது ஆசிட் வீசினார். "நான் அவருக்காக மூன்று வருடங்கள் கல்லூரியைத் படிப்பை கூட விட்டு விட்டேன். அவர் என்னை ஏமாற்றினார். இதனால்தான் நான் அவர் மீது ஆசிட் ஊற்றினேன்" என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.
மாறாக, ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானவர் கூறுவது என்னவென்றால், பரஸ்பரம் ஒப்புக் கொண்டு தான் தங்கள் உறவை முறித்துக் கொண்டதாகக் கூறினார். அதைத் தொடர்ந்து தான் அவர் வேறொருவரை மணந்தார் எனவும் கூறப்படுகிறது.
பெந்தா கோட்டாலா கிராமத்தில் உள்ள தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அந்தப் பெண் தனது முன்னாள் காதலர் மீது ஆசிட் வீசியதாக நந்தியல் தாலுகா காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திவாகர் ரெட்டி ஏ.என்.ஐ.
குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு வாரத்திற்கு முன்பு அவன் கையில் ஆசிட் ஊற்றி தாக்கினார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த முறை அவள் அதை அவன் முகத்தில் வீசினாள்.
"அவர் நந்தியால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று ரெட்டி கூறினார். இந்திய குற்றப்பிரிவில் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
ALSO READ | எல்லையில் 5 சிறுவர்களை கடத்தியுள்ளதா சீன ராணுவம்? லடாக்கில் குழப்பம் நிறைந்த பீதி!!