Shocking: புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
குஜராத்தின் வதோதராவில் புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோவிட் -19 நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அக்குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
வதோதரா (குஜராத்): குஜராத்தின் வதோதராவில் புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கோவிட் -19 நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அக்குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஷீல் ஐயர் கூறினார்.
"குழந்தைகள் பிறந்து, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு காரணமாக குழந்தைகள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். முதலில் நாங்கள் தொற்றுநோய்களுக்கான அனைத்து பொதுவான காரணங்களையும் ஆராய்ந்தோம். ஆனால் பின்னர் கோவிட் -19 நோய்த்தொற்றுக்கு குழந்தைகளை பரிசோதித்தபோது, அவர்களது பரிசோதனை முடிவுகள் தொற்றுக்கு சாதகமாக வந்தன.” என்று அந்த மருத்துவர் வியாழக்கிழமை கூறினார்.
பச்சிளங்குழந்தைகளின் பெற்றோருக்கும் கொரோனா தொற்று (Corona) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கும் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதிதாகப் பிறந்த இரட்டை குழந்தைகளின் பெற்றோர் இருவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ALSO READ: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் -5 தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைக்கலாம்: Dr Reddy's
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக (Second Wave of Corona) வேகமாக பரவி வருகிறது. கட்டம் கட்டமாக பல மாநிலங்களில் ஊரடடங்கு மீண்டும் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றது. கொரோனா வைரசின் இந்த இரண்டாவது அலை குறிப்பாக குழந்தைகளை அதிகமாக பாதிப்பதாகவும் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மொத்த தொற்றுநோய்களில் 78.9% இந்த மாநிலங்களில் இருப்பதாகவும் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கோவிட் -19 (COVID-19) எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. இது செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும், அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 அன்று 90 லட்சத்தையும் தாண்டி, டிசம்பர் 19 அன்று ஒரு கோடியைத் தாண்டியது.
ALSO READ: இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR