மீண்டும் மீண்டும் தீண்டும் தொற்று: ஒரே நாளில் 81,000 பேருக்கு மேல் பாதிப்பு

மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மொத்த தொற்றுநோய்களில் 78.9% இந்த மாநிலங்களில் இருப்பதாகவும் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 2, 2021, 10:47 AM IST
  • கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேர் கோவிட் -19 தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
  • தற்போது நாடு முழுவதும் 6,14,696 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மீண்டும் மீண்டும் தீண்டும் தொற்று: ஒரே நாளில் 81,000 பேருக்கு மேல் பாதிப்பு title=

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேர் கோவிட் -19 தொற்றுநோயால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1,23,03,131 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் நாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய தொற்றுநோய்களின் (Pandemic) மிகப்பெரிய அளவாகும் இது. கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டனர். 

தினசரி எண்ணிக்கையில் மகாராஷ்டிரா தொடர்ந்து மிகப்பெரிய அளவுகளைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் மேலும் 469 பேர் இந்த நோய்க்கு பலியானார்கள். இது நான்கு மாதங்களில் மிக அதிக அளவுகளாகும். 2020 டிசம்பர் 5 அன்று நாட்டில் கடைசியாக 482 இறப்புகள் பதிவானது. இந்தியாவில் கோவிட் -19 காரணமாக மொத்த இறப்பு எண்ணிக்கை 1,63,396 ஆக உள்ளது.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் மொத்தம் 50,356 பேர் இந்த நோயிலிருந்து மீண்டனர். மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை இப்போது 1,15,25,039 ஆக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் 6,14,696 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது மீண்டும் ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை திங்களன்று ஐந்து லட்சத்தை எட்டியது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மொத்த தொற்றுநோய்களில் 78.9% இந்த மாநிலங்களில் இருப்பதாகவும் அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கோவிட் -19 (COVID-19) எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. இது செப்டம்பர் 28 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 70 லட்சத்தையும், அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தையும், நவம்பர் 20 அன்று 90 லட்சத்தையும் தாண்டி, டிசம்பர் 19 அன்று ஒரு கோடியைத் தாண்டியது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுன் (ICMR) படி, இந்தியா இதுவரை கோவிட் -19 க்கான 24,59,12,587 மாதிரிகளை பரிசோதித்துள்ளது.

இவற்றில் 11,13,966 மாதிரிகள் வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டன.

ALSO READ: கொரோனா: சானிடைசரில் புற்றுநோயின் ஆபத்து உண்டா? அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் தடுப்பூசிகள்

நாட்டில் இதுவரை 6,87,89,138 பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

இந்தியாவில் தடுப்பூசி செயல்முறை ஜனவரி 16 ஆம் தேதி சுகாதாரப் பணியாளர்களுக்கு துவங்கியது. முன்னணி பணியாளர்களுக்கு தடுப்பூசி பிப்ரவரி 2 முதல் போடப்பட்டது. 

கோவிட் -19 தடுப்பூசியின் அடுத்த கட்டம் மார்ச் 1 ஆம் தேதி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயது மேற்பட்ட நாள்பட்ட நோய்களை உடையவர்களுக்கும் தொடங்கியது.

வியாழக்கிழமை முதல் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்குமான தடுப்பூசி செயல்முறை தொடங்கியது. 

மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதுடன், கோவிட் தடுப்பூசியின் வேகத்தையும் கவரேஜையும் விரைவாக அதிகரிப்பதை உறுதி செய்வதற்காக பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து தடுப்பூசி மையங்களையும் உகந்த முறையில் பயன்படுத்த தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

ALSO READ: COVID-19 in Tamil Nadu: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று 1500-ஐ தாண்டியது

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News