கவலையை எழுப்பும் Omicron, கிடு கிடுவென பரவும் தொற்று
கொரோனா வைரஸ் புதிய மாறுபாடு Omicron மெதுவாக அழிவை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் 781 பேர் புதிய Omicron ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது கோவிட்-19 இன் புதிய மாறுபாடான (Covid-19 Omicron Variant) ஒமிக்ரான் அதிதீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 781 பேர் தற்போது ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 9195 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, மேலும் நாட்டில் செயலில் உள்ள தொற்று 77002 ஆக உயர்ந்துள்ளன.
டெல்லியில் ஒமிக்ரானில் தொற்று வேகமாக பரவுகிறது
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாடு முழுவதும் 781 ஒமிக்ரான் (Omicron) மாறுபாடுகள் பதிவாகியுள்ளன. தேசிய தலைநகர் டெல்லியில் ஒமிக்ரானின் அதிகபட்ச எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது, அவர்களில் 57 பேர் குணமடைந்துள்ளனர்.
ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்
மகாராஷ்டிராவின் நிலை என்ன
டெல்லிக்கு (Delhi) அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது, அங்கு இதுவரை 167 பேருக்கு ஒமிக்ரான் தாக்கியுள்ளது. மாநிலத்தில் 72 பேர் குணமடைந்துள்ளனர். இது தவிர, குஜராத்தில் 73, கேரளாவில் 65, தெலுங்கானாவில் 62 மற்றும் ராஜஸ்தானில் 46 ஒமிக்ரான் தொற்று பதிவாகியுள்ளன.
நாட்டின் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமிக்ரான்
இந்தியா இதுவரை 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 781 ஒமிக்ரான் மாறுபாட்டின் அடையாளம் கண்டுள்ளது, அவர்களில் 241 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் டெல்லி மற்றும் மகாராஷ்டிராவைத் தவிர குஜராத் (73), கேரளா (65), தெலுங்கானா (62), ராஜஸ்தான் (46), கர்நாடகா (34), தமிழ்நாடு (34), ஹரியானா (12). மேற்கு வங்கம் (11) மத்தியப் பிரதேசம் (9), ஒடிசா (8), ஆந்திரப் பிரதேசம் (6), உத்தரகாண்ட் (4), சண்டிகர் (3), ஜம்மு காஷ்மீர் (3), உத்தரப் பிரதேசம் (2), கோவா (1), இமாச்சலப் பிரதேசம் (1), லடாக் (1) மற்றும் மணிப்பூர் (1) ஆகிய இடங்களில் Omicron தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 9195 பேருக்கு கொரோனா தொற்று
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9195 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அதன் பிறகு நாட்டில் செயலில் உள்ள கோவிட் -19 தொற்றுக்கள் 77002 ஆக உயர்ந்துள்ளன. நாடு முழுவதும் இதுவரை 4 லட்சத்து 80 ஆயிரத்து 592 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 3 கோடியே 42 லட்சத்து 51 ஆயிரத்து 292 பேர் குணமடைந்துள்ளனர்.
ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR