அதிர்ச்சி! ₹50000-க்கு 16-வயது கன்னி பெண்களை விற்கும் மாநிலம்...!
உத்திரபிரதேச மாநிலத்தின் அஹமது நகரில் 16-வயது இளம்பெண் ஒருவரை ₹50000-க்கு விற்க முயன்ற 8 நபர் கொண்ட குழுவை காவல்துறயினர் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தின் அஹமது நகரில் 16-வயது இளம்பெண் ஒருவரை ₹50000-க்கு விற்க முயன்ற 8 நபர் கொண்ட குழுவை காவல்துறயினர் கைது செய்துள்ளனர்.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்தினை நாம் பார்த்ததுண்டு. இந்த திரைப்படத்தில் ஆதரவற்ற இளம்பெண்களை தரகர்கள் விபச்சார விடுதிகளில் விற்றுவிடுவதை நாம் பார்த்திருப்போம். இதேப்போன்ற நிகழ்வு தான் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தின் அஹமது நகர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் அஹமதுநகர் காவல்நிலைய சராங்கத்திற்கு உட்பட்ட பகுதியில் 20-லிருந்து 80-வயது வரை நிறம்பிய ஆண்கள் கூட்டம் ஒரு ஏலத்திற்காக காத்திருக்கிறது. கருணை இல்லா இந்த ஆண்களுக்கு மத்தியில் கண்ணீருடன் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவரை ₹50000 ஆரம்ப விலையாய் கொண்டு ஏலம் விட ஒரு நபர் துவங்க, ஏலம் ₹80000 வரை சென்றது. அப்போது அங்கே வந்த காவல்துறையினர் இளம்பெண்ணை விற்க முயன்ற நபர் உள்பட அவரது சகாக்கல் என மொத்தம் 8 பேரை கைது செய்தது. இதில் இரண்டு பெண்களும் அடக்கம்.
அப்பகுதியை பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த சம்பவம் குறித்து அஹமது நகர் காவல்துறை அதிகாரி தர்மேந்திர யாதவ் தெரிவிக்கையில்., ஏலப் பொருளாய் அமர வைக்கப்பட்டு இருந்த இளம்பெண்னின் தாயார் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இதனையடுத்து அவரது தந்தை இரண்டாம் திருமனம் செய்ய, அவர்களது வாழ்க்கைக்கு இடையூராய் தெரிந்த இளம்பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளார் அவரது இரண்டாம் தாய்.
இதற்காக ஜார்காண்ட் மாநிலம் ரான்சியில் இருந்து உத்திரபிரதேசம் சென்று, அங்குள்ள தரகர்களை சந்தித்துள்ளார். பின்னர் அவர்களது உதவியேடு தனது விற்பனையினை துவங்கியுள்ளார். இதுகுறித்த தகவலினை ஊர் பொதுமக்கள் காவல்துறைக்கு தெரிவிக்க, விஷயம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறயினர், முறைகேடான ஏல விற்பனையில் ஈடுப்பபட்ட நபர்களை கைது செய்துள்ளனர்.
காவல்துறை அறிக்கையின் படி இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள்., கலாவதி, குர்ஜாவில் வசிக்கும் ராஜேஷ் தேவி, திரேந்திரா, அவுரங்காபாத்தில் உள்ள கங்காஹரி கிராமத்தில் வசிப்பவர், ஜிதேந்திரா, இந்திர சிங், அவுரங்காபாத்தில் வசிக்கும் மகேந்திரா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் அரசாங்க சிறப்பு முகாமில் வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.