Covid-19 Vaccine Registration: மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று மாலை 4 மணி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்த மத்திய அரசாங்கத்தின் "அனைவருக்கும் தடுப்பூசி" (Covid-19 Vaccine for all) திட்டத்தில் பதிவு செய்துகொள்ள இன்று தொடங்கியது. இதற்கிடையில் ஒரே நேரத்தில் அனைவரும் பதிவி செய்ய முயன்றதால் Cowin போர்டல் செயலிழந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம் Aarogya Setu பயன்பாட்டில் Login Error தோன்றியது. பலருக்கு Login செய்வதில் சிக்கல் ஏற்பட்டது, மேலும் பலருக்கு வலைத்தளம் திறக்கப்படவில்லை. Cowin போர்ட்டலில் உள்நுழையும்போது OTP ஐப் பெற மிகவும் தாமதமாகி வருவதாகவும், OTP வரும் நேரத்தில், நேரம் முடிந்துவிட்டதாகவும் சிலர் புகார் கூறினர்.


கோவின் (Cowin) போர்ட்டல் மூலம் பதிவு செய்வது எப்படி?


1. www.cowin.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.


2. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, உங்கள் கணக்கை உருவாக்க OTP ஐப் பெறுங்கள்.


3. பின்னர் OTP-ஐ உள்ளிட்டு “சரிபார்க்கவும்” (Verify) பொத்தானைக் கிளிக் செய்க.


4. தற்போது தடுப்பூசி பதிவு பக்கம் திறக்கப்படும். இந்த பக்கத்தில், உங்கள் புகைப்பட ஐடி ஆதாரத்தை தேர்வு செய்ய ஒரு விருப்பம் இருக்கும்


5. உங்கள் பெயர், வயது, பாலினம் ஆகியவற்றை பூர்த்தி செய்து, அடையாள ஆவணத்தை பதிவேற்றவும்


6. “பதிவு” (Register) பொத்தானைக் கிளிக் செய்க


7. பதிவு முடிந்ததும், இப்பொழுது கணினி “உங்கள் விவரங்களை” (Account Details) காண்பிக்கும்


8. பதிவுசெய்த விண்ணப்பதாரர் “மேலும் சேர்க்க” (Add More) பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், இந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட மேலும் மூன்று பேரைச் சேர்க்கலாம்


9. "கால நியமனம்" (Schedule Appointment) பொத்தானைக் கிளிக் செய்க.


10. உங்கள் மாநில, மாவட்டம், ஊர் பேர் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களுக்கான தடுப்பூசி மையத்தைத் தேர்ந்தெடுங்கள்.


11. தடுப்பூசி நிலவரம் மற்றும் செலுத்தப்படும் தேதி காண்பிக்கப்படும். "முன்பதிவு" (Book) பொத்தானைக் கிளிக் செய்க


12. முன்பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், நீங்கள் ஒரு குறிஞ்செய்தியைப் பெறுவீர்கள். அந்த விவரங்கள் தடுப்பூசி மையத்தில் காட்டப்பட வேண்டும்


ALSO READ | 18+ அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி: எங்கே, எப்படி பதிவு செய்வது?


ஆரோக்யா சேது ஆப் (Aarogya Setu App) மூலம் பதிவு செய்வது எப்படி?


1. ஆரோக்யா சேது செயலியின் முகப்புப்பக்கத்தில், "கோவின்" (CoWIN) என இருக்கும் இடத்திற்கு செல்லவும்.


2. கோவின் ஐகானின் கீழ், "தடுப்பூசி" (Vaccination) எனக் குறிப்பிட்டு இருப்பதை கிளிக் செய்து "இப்போது பதிவுசெய்க" (Register Now) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்


3. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு "சரிபார்த்து தொடரவும்" (Proceed to Verify) என்பதைக் கிளிக் செய்க. உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு மீண்டும் "சரிபார்த்து தொடரவும்" என்பதைத் கிளிக் செய்யவும்.


4. உங்கள் மொபைல் எண் சரிபார்ப்பு முடிந்ததும், நீங்கள் ஒரு புகைப்பட அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும்.


5. வயது, பாலினம், பிறந்த ஆண்டு போன்ற பிற விவரங்களையும் நீங்கள் நிரப்ப வேண்டும்.


6. ஆரோக்யா சேது பயன்பாட்டின் மூலம் அதிகபட்சமாக 4 பேரை நீங்கள் பதிவு செய்யலாம்.


7. உங்கள் மாநில, மாவட்டம், ஊர் பேர் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களுக்கான தடுப்பூசி மையத்தைத் தேர்ந்தெடுங்கள்.


8. வெற்றிகரமாக பதிவுசெய்ததும், நீங்கள் நிரப்பிய விவரங்களுடன் ஒரு எஸ்எம்எஸ் பெறுவீர்கள்.


UMANG செயலி மூலம் பதிவு செய்வது எப்படி?


1. உமாங் ஆப் (UMANG App) முகப்புப்பக்கத்தில் இருக்கும், 'கோவின்' (CoWin) தளத்திற்குச் செல்லவும்.


2. "பதிவு செய்யுங்கள் (Register) அல்லது தடுப்பூசிக்கு உள்நுழைக" என்பதைக் கிளிக் செய்க.


3. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு "சமர்ப்பி" (Submit) என்பதைக் கிளிக் செய்க.


4. நீங்கள் மொபைல் எண்ணில் OTP ஐப் பெறுவீர்கள், OTP ஐ உள்ளிட்டு "OTP ஐ சரிபார்க்கவும்" என்பதைக் கிளிக் செய்க.


5. ஏதாவதொரு உங்கள் புகைப்பட அடையாள அட்டையை தேர்ந்தெடுத்து, புகைப்பட அடையாள எண், அடையாள அட்டையில் இருக்கும் பெயர், பிறந்த ஆண்டு மற்றும் பாலினம் ஆகியவற்றை உள்ளிடவும். "சமர்ப்பி" என்பதைக் கிளிக் செய்க.


6. தற்போது உங்கள் விவரங்கள் சேர்க்கப்படுகிறது. அது "சரி"யா எனக் கேட்கும். "சரி" என்பதைக் கிளிக் செய்க.


7. தானாகவே புதிய பக்கத்திற்கு நீங்கள் செல்வீர்கள். அதில் "மேலும் சேர்" பொத்தானைப் பயன்படுத்தி, மேலும் 4 பயனாளிகளை நீங்கள் சேர்க்கலாம்.


8. உங்கள் ஏரியா பின்கோடு அல்லது உங்கள் மாவட்டத்தைப் பயன்படுத்தி தடுப்பூசி மையத்தைத் தேடலாம்.


10. தற்போது தடுப்பூசி மையங்களின் பட்டியல் உங்கள் முன்னே தோன்றும். நீங்கள் விரும்பிய மையத்தை தேர்ந்தெடுத்து, தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிப்படுத்த "உறுதிப்படுத்து" (Confirm) என்பதைக் கிளிக் செய்க.


11. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் அடங்கிய எஸ்எம்எஸ் கிடைக்கும்.


12. நீங்கள் உறுதி செய்யப்பட்ட பக்கத்தை PDF ஆக பதிவிறக்கம் செய்யலாம் அல்லது உங்கள் தொலைபேசியில் சேமித்துக் கொள்ளலாம். 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR