Shocking: குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக sanitiser அளிக்கப்பட்ட கொடூரம்
சொட்டு மருந்து வழங்கப்பட்ட நாளில் மதியம் 2 மணியளவில், போலியோ சொட்டு மருந்துகள் இருக்க வேண்டிய இடத்தில் சானிடிசர் இருப்பதை அந்த சுகாதார மையத்தின் மூன்று ஊழியர்கள் உணர்ந்தனர்.
நாக்பூர்: மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தில் இருந்து அலட்சியத்தின் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அங்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சேனிடிசர் வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து 1 முதல் 5 வயது வரையிலான இந்த குழந்தைகள், யவத்மாலில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (GMCH) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
குழந்தைகள் சுமார் 48 மணி நேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது என்று யவத்மால் மாவட்ட சுகாதார அதிகாரி ஹரி பவார் தெரிவித்தார்.
யவத்மல் ஜில்லா பரிஷத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா பஞ்சலின் கூற்றுப்படி, கட்டன்ஜி தெஹ்ஸிலிலுள்ள பம்போரா பொது சுகாதார மையத்தின் (PHC) கப்சி துணை மையத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்துக்கு பதிலாக இரண்டு சொட்டு சானிடைசர் (Sanitiser) வழங்கப்பட்டது.
தவறுதலாக சானிடைசர் வழங்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரை பணியாளர்கள் மீண்டும் சுகாதார மையத்திற்கு அழைத்தனர்.
போலியோ சொட்டு மருந்து (Polio Drops) வழங்கப்பட்ட நாளில் மதியம் 2 மணியளவில், போலியோ சொட்டு மருந்துகள் இருக்க வேண்டிய இடத்தில் சானிடிசர் இருப்பதை அந்த சுகாதார மையத்தின் மூன்று ஊழியர்கள் உணர்ந்தனர். சமூக சுகாதார அதிகாரி, ஆஷா பணியாளர் ஒருவர் மற்றும் அங்கன்வாடி சேவிகா ஆகியோர் இந்த தவறை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, இந்த சுகாதார ஊழியர்கள் (Health care workers) அந்த குழந்தைகளின் பெற்றோரை சுகாதார மையத்துக்கு அழைத்து போலியோ மருந்து சொட்டுகளை அளித்தனர்.
இதற்கிடையில், இந்த விஷயம் உள்ளூர் சர்பஞ்சை அடைந்தது. அவர் உயர் அதிகாரிகள் மிகவும் முட்டாள்தனமாகவும் அஜாக்கிரதையாகவும் நடந்துகொள்வதாக புகார் கூறினார். பஞ்சல், "ஒரு குழந்தை மட்டுமே வாந்தியெடுத்தது. ஆனால் போலியோ சொட்டுகளால் கூட இது ஏற்படலாம். ஆனால் அது பிரச்சினை அல்ல. ஊழியர்களின் அலட்சியமான போக்குதான் இங்கு முக்கியமான பிரச்சனை. நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
ALSO READ: பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி நிதி- FM நிர்மலா சீதாராமன்!
பஞ்சல் இந்த அலட்சிய போக்கிறகாக அதிகாரிகளை அவதூறாக பேசியதுடன், போலியோ சொட்டு மருந்துகள் பெயரிடப்பட்ட பாட்டில்களில் சேமிக்கப்படுகின்றன. இவற்றில் தடுப்பூசி வைரல் மானிட்டரைக் கொண்டிருக்கு ஒரு குறிப்பிட்ட நிற குறியீடு இருக்கும். இவற்றை சேமித்து வைப்பதற்கான சரியான வெப்பநிலை பராமரிக்கப்படுவதை இது குறிக்கும்.
ஆகையால் இவை சானிடைசருடன் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே என்றார். அந்த சுகாதார மையத்தில் இருந்த மூன்று பணியாளர்களுக்கும் போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்கான முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்பதை சோதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
ALSO READ: இளம் வயதிலேயே சுகாதார காப்பீடு எடுப்பதற்கான காரணங்கள் என்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR