ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள யோஜ்னா பவன் என்ற அரசு அலுவலகம் ஒன்றில் பூட்டியிருந்த அல்மாரியில் இருந்து ரூ.2.31 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலமாரி வைக்கப்பட்டிருந்த கட்டடத்தின் அடித்தளத்தை அணுகக்கூடிய ஏழு ஊழியர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிராலியில் ரூ. 2000!


அல்மாரியில் வைக்கப்பட்டிருந்த டிராலி சூட்கேஸில் ரூ.2,000 மற்றும் ரூ.500 மதிப்புள்ள நோட்டுகள் இருந்ததாகவும், ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் கரன்சி நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்ற நாளில் இந்த பணம் மீட்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.


பணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் தலைமைச் செயலாளர் உஷா சர்மா, காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) உமேஷ் மிஸ்ரா, கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) தினேஷ் எம்என் மற்றும் ஜெய்ப்பூர் ஆணையர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் இந்த விவகாரம் குறித்து முதல்வர் அசோக் கெலாட்டிடம் விளக்கமளித்தனர். நேற்றிரவு தலைமை செயலகத்தில் கூட்டாக செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. 


ரூ. 2.31 கோடி


"ஒரு அல்மாரியில் இருந்து கோப்புகள் மற்றும் டிராலி சூட்கேஸ் முழுவதும் பணம் மற்றும் தங்கம் இருந்தது, அதைத் தொடர்ந்து ஊழியர்கள் அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பணம் ரூ.2.31 கோடியும் மற்றும் தங்கத்தின் எடை 1 கிலோவும் உள்ளது. இ-ஃபைலிங் திட்டத்தின் கீழ் கோப்புகள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. பூட்டியிருந்த இரண்டு அலமாரிகளின் சாவிகள் கிடைத்ததையடுத்து அவைகளும் திறக்கப்பட்டன.


மேலும் படிக்க | ₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது?!


7 ஊழியர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விவகாரம் தொடர்பான விசாரணை தொடங்கியுள்ளது. விரைவில் முழு தகவல்களும் வெளியிடப்படும்" என்றார். பணம் மற்றும் தங்கம் மீட்கப்பட்ட அலமாரி பல மாதங்களாக பூட்டியே கிடந்தது. ஆதார்-யுஐடி-இணைக்கப்பட்ட ஊழியர்களால் பணம் கண்டுபிடிக்கப்பட்ட அடித்தளத்தை அணுகப்பட்டுள்ளது. 


காங்கிரஸ் கட்சியை குறிவைக்கும் பாஜக


அடித்தளத்தில் உள்ள அலமாரிகளுக்கு அணுகல் உள்ள ஊழியர்களை போலீசார் விசாரிக்கிறார்கள். இது யாருடைய பணம், எப்படி வந்தது, விசாரணை நடத்தப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து வருகின்றனர். இந்த அலமாரி நீண்ட நாட்களாக மூடப்பட்டு இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகவில்லை போலும்" என்றார். 


இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சியான பாஜக குறிவைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் டுவிட்டரில், "ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அமர்ந்து ஆட்சியில், அரசு அலுவலகத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் மீட்கப்பட்டது. கெலாட் ஆட்சி ஊழலுக்கு துணைபோகிறது என்பதற்கு இது சான்றாகும்" என குறிப்பிட்டுள்ளார். 


அவசர அவசரமாக..


 யோஜ்னா பவனுக்கு இவ்வளவு பெரிய தொகை ரொக்கப்பணம் மற்றும் தங்கம் எப்படி வந்தது என்று முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் கேள்வியெழுப்பினார். இந்த சம்பவத்தை மறைக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத்துறை, அமலாக்கத்துறை, மற்றும் ஊழல் தடுப்பு பணியகம் போன்ற துறைகளைச் சேர்ந்த எந்த அதிகாரிகளும் இந்த அவசர அவசரமாக கூட்டப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுக்கவிவ்லை எனவும் குற்றஞ்சாட்டினார். 


முன்னதாக, 2000 ரூபாய் தாள்களை புழக்கத்தில் இருந்து திரும்பி எடுத்துக்கொள்வதாகவும், செப். 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் 2000 ரூபாய் தாள்களை கொடுத்து மாற்றிக்கொள்ளும்படியும் இந்திய ரிசர்வ் வங்கி நேற்றிரவு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | ரூ.2000 நோட்டுகள் இனி செல்லாது? RBI அறிவிப்பின் முழு விவரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ