ராகுல் காந்தி மீது இளைஞர் ஒருவர் ஷூவை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், பாஜக என அனைத்துக் கட்சிகளுமே தீவிரமாக தேர்தல் பணிகளில் குதித்துள்ளன.


இநத நிலையில் அங்குள்ள சீதாப்பூரில் ராகுல் காந்தி இன்று ரோட்ஷோ நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ராகுல் காந்தி பேசிக் கொகண்டிருக்கும்போது திடீரென ஒரு நபர் அவரை நோக்கி ஷூவை வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நல்ல வேளையாக ஷூ ராகுல் காந்தி மீது படவில்லை. உடனடியாக பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து அப்புறப்படுத்திக் கொண்டு சென்றனர். அவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டாலும் கூட ராகுல் காந்தியின் பிரசாரம் நிற்கவில்லை.