கர்நாடகாவில் 13 எம்எல்ஏக்களை தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாதளம் கூட்டணி ஆட்சிக்கான சிக்கல் அதிகரித்த வண்ணம் உள்ளது. 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ராஜினாமா செய்யும் முடிவில் மாற்றமில்லை என அதிருப்தி எம்.எல்.ஏக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், நேற்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய முதலமைச்சர் குமாரசாமி, அவரின் தந்தை தேவகவுடா ஆகிய இருவரும், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.


அதிருப்தி எம்.எல்.ஏக்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராமலிங்க ரெட்டிக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுத்து சமாதானப்படுத்துமாறு காங்கிரசுக்கு குமாரசாமி அறிவுறுத்தியுள்ளார். அதே போன்று மும்பை ஓட்டலில் தங்கியிருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அழைத்து அவர்களை சமதாதானப்படுத்த முயற்சிக்குமாறு சித்தராமையாவிடம் குமாரசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையில், முதல்வர்  குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் சிறுதொழில் துறை மந்திரியாக இருந்த சுயேட்சை எம்.எல்.ஏ.நாகேஷ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். 



இதை தொடர்ந்து, கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மந்திரிசபையில் காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றிருந்த 21  மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை ராஜினாமா செய்ததாக அம்மாநில சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சித்தராமையா இன்று குறிப்பிட்டுள்ளார்.


துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்த அறிவிப்பை சித்தராமையா வெளியிட்டார்.