பாஞ்சாப் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியதால் தான் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாக சித்து கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நவ்ஜோத் சிங் சித்து நேற்று திடீர் என்று மேல்-சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவரது மனைவியும் பஞ்சாபில் தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து இருவரும் ஆம் ஆத்மியில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின.


இந்நிலையில் சித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பஞ்சாப் விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனக்கூறியதால் பதவி விலகினேன். நான்கு முறை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் கட்சி இவ்வாறு கூறுவது 3-வது முறையாகும். குடும்பமா, கட்சியா, பஞ்சாபா என்ற நிலை வந்தால், 100 சதவீதம் பஞ்சாப் மாநிலத்தை தேர்வு செய்வேன். பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை லாபம் நஷ்டம் பார்க்க மாட்டேன். எந்த கட்சியை விடவும் மாநிலம் பெரியது. பஞ்சாப் மாநிலத்திற்கு சேவை செய்யவே விரும்புகிறேன். மாநிலத்திற்கு சேவை செய்யாமல் என்னால் ஒதுங்கி இருக்க முடியாது. எனது மாநிலத்தையும், மக்களையும் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். பஞ்சாபுக்கு எங்கு பலன் கிடைக்கிறதோ அங்கு இருக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் நான் ராஜ்யசபா எம்.பி.,யாக விரும்பினேன். ஆறுதல் பரிசாக ராஜ்யசபா எம்.பி., பதவியை ஏற்க மாட்டேன் எனக்கூறினார்.