ஆதார் மூலம் விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற  தகவல் தவறானது என ஆதார் ஆணையம் தெரிவித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.


கடந்த 2016ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவை இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன.


இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்.


இதனால் தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்  தடை விதித்தது. 


இந்நிலையில் தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் தொலைத்தொடர்பு துறை ஒன்றாக இணைந்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளனர். அதில், 50 கோடி மொபைல் எண்கள் துண்டிப்பு ஆபத்தில் இருப்பதாக அறிக்கையை மறுத்துள்ளன. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால் புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது. ஆதார் eKYC மூலம் வழங்கப்பட்ட மொபைல் எண் துண்டிக்கப்பட வேண்டும் என்று அதன் ஆதார்  தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்  எங்கும் சுட்டி காட்டவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.