தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை - OP ராவத்!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியினை தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் இன்று அறிவித்துள்ளார்!
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியினை தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் இன்று அறிவித்துள்ளார்!
சத்தீஸ்கர் | 90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெறும்.
முதற்கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 12, 2018
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - நவம்பர் 20, 2018
வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018
மத்திய பிரதேசம் | 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில்
வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018
வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018
மிசோரம் | 40 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில்
வாக்குப்பதிவு - நவம்பர் 28, 2018
வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018
தெலங்கானா | 119 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தெலங்கான மாநிலத்தில்
வாக்குப்பதிவு - டிசம்பர் 7, 2018
வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018
ராஜஸ்தான் | 200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில்
வாக்குப்பதிவு - டிசம்பர் 7, 2018
வாக்கு எண்ணிக்கை - டிசம்பர் 11, 2018
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கேட்டுக்கொண்டதால் தமிழக்கத்தின் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் OP ராவத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் 25,000 துருப்புக்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.