மோசமான வானிலை காரணமாக, பெங்களூரு சென்ற 3 விமானங்கள் சென்னைக்கு தடம் மாற்றி விடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மோசமான வானிலை நிலவுவதால், பெங்களூருவுக்கு வரும் விமானங்கள் சென்னை மார்கமாக மாற்றி விடப்படுகிறது. காலை முதல் 3 விமானங்கள் சென்னைக்கு மாற்றி விடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இரண்டு IndiGo விமானம், ஒரு Air India விமானம் என 3 விமானங்கள் தடம் மாற்றி விடப்பட்டுள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என பெங்களூருவின் கெம்பகௌடா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து IndiGo விமான சேவை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்,. பெங்களூருவில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 50-க்கும் மேலான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன் தங்களுடைய விமானத்தின் சேவை நிலை குறித்து அறிந்து பயணிப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளது.


தற்போது தென்மாநிலங்களில் குளிர் காலம் துவங்கியுள்ள நிலையில், இந்த பருவகாலத்தில் முதல் முறையாக பெங்களூருவில் கடந்த வியாழன் அன்று முதன் முறையாக KIA விமானம் சேவை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அன்றைய தினமே 54 விமானங்களின் சேவை மூடுபனி காரணமாக பாதிக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது. இதில் 36 விமானங்கள் பெங்களூருவில் இருந்து புறப்படவிருந்து விமானங்கள், 17 விமானங்கள் பெங்களூருவிற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்து விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.