Moderna-வின் ஒற்றை டோஸ் தடுப்பூசி: இந்தியாவில் கூடிய விரைவில் கிடைக்கும் 5 கோடி டோஸ்கள்
தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமான மாடர்னா அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செயல்முறை முழு முனைப்போடு நடந்துகொண்டு இருக்கிறது. இதுவரை இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் செயல்முறையில் உள்ளன. இந்தியாவின் சில பகுதிகளில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமான மாடர்னா அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் ஒற்றை டோஸ் கொரோனா (Corona) தடுப்பூசியை அறிமுகப்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, நிறுவனம் தற்போது 5 கோடி டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்காக சிப்லா மற்றும் மற்றொரு மருந்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
குழந்தைகள் தடுப்பூசியின் சோதனை முடிவு வெளியிடப்பட்டது
சற்று முன்பு, மாடர்னா குழந்தைகளுக்கான தடுப்பூசி (Vaccine) பரிசோதனையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் அதன் தடுப்பூசி குழந்தைகளுக்கு 100% பயனுள்ளதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிறுவனம் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட 3 ஆயிரம் 732 குழந்தைகள் மீது அதன் தடுப்பூசி பரிசோதனை செய்துள்ளது. இதில், 2 ஆயிரம் 488 குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கலும் வழங்கப்பட்டன.
ALSO READ: WHO தடுப்பூசி பட்டியலில் கோவேக்ஸின் இடம் பெறுவது எப்போது?
மீதமுள்ள குழந்தைகளுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டு டொஸ்களும் வழங்கப்பட்ட குழந்தைகளில் கொரோனாவின் அறிகுறிகள் தென்படவில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஒரு டோஸ் செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு இது 93% பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் தடுப்பூசி பயன்பாட்டிற்கான ஒப்புதலை FDA -விடம் கோரும்
இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட முடிவுகளுக்குப் பிறகு, தடுப்பூசி உற்பத்தியாளரான மாடர்னா, ஜூன் மாதத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு ஒப்புதல் பெற அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்பான எஃப்.டி.ஏ-வை அணுகப்போவதாக கூறியுள்ளது. பாரத் பயோடெக் (Bharat Biotech) நிறுவனமும் குழந்தைகளுக்கு நாசி வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது. இதற்கான சோதனை தொடங்கி விட்டது. நாசி ஸ்ப்ரே தடுப்பு மருந்தின் 4 சொட்டுகளே கொரோனாவை வெல்வதில் திறம் மிக்கதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தடுப்பு மருந்தை இரண்டு நாசி துவாரங்களிலும் இரண்டு சொட்டுகள் விட வேண்டும்.
ALSO READ: Coronavirus Updates: இந்தியாவில் கோவிட் இறப்புகள் 3 லட்சத்தை தாண்டியது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR