WHO தடுப்பூசி பட்டியலில் கோவேக்ஸின் இடம் பெறுவது எப்போது?

உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசர பயன்பாட்டு பட்டியலில் (EUL) பாரத் பயோடெக்கின் கோவாக்சின் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 25, 2021, 04:58 PM IST
  • கோவிஷீல்டிற்கு WHO பட்டியலில் இடம் கிடைத்துள்ளது
  • இந்தியா பயோடெக் தடுப்பூசியும் பட்டியலில் சேர்கக்ப்பட அரசு நடவடிக்கை.
  • பாரத் பயோடெக் இதற்கு தேவையான பெரும்பாலான ஆவணங்களை சமர்பித்துள்ளது
WHO தடுப்பூசி பட்டியலில்  கோவேக்ஸின் இடம் பெறுவது எப்போது? title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் (Corona Virus)பரவல் காலத்தில், வரும் காலத்தில், மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது, தடுப்பூசி போட்டுக் கொண்டதன் அடிப்படையில் அனுமதி வழங்குவது குறித்து உலக அளவில் விவாதம் நடைபெறுகிறது. WHO அதாவது உலக சுகாதார அமைப்பு, இதற்கான தடுப்பூசிகளின் பட்டியலைத் தயாரித்து வருகிறது. 

WHO அவசரகால பயன்பாட்டு பட்டியலில் (EUL) சேர்க்கப்படும் தடுப்பூசிகளின்  பட்டியலில் சேர்க்கப்படும், தடுப்பூசிகளை எடுத்துக்கொள்பவர்கள் பிற நாடுகளுக்கு செல்ல தகுதியுடையவர்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதில்லை.

உலக சுகாதார அமைப்பு இதுவரை தயாரித்துள்ள பட்டியலில், அஸ்ட்ராஜெனெகாவின்  பெயர் உள்ளது, ஆனால் கோவாக்சின் (COVAXIN)  இந்த பட்டியலில். அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி, இந்தியாவில் சீரம் நிறுவனம், கோவிஷீல்ட் (COVOSHIELD) என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. COVAXIN தடுப்பூசியின் பெயர் இறுதி பட்டியல் சேர்க்கப்படாவிட்டால், இந்தியாவில் அதனை போட்டுக் கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்களின் வெளிநாட்டு பயணம் கேள்விக் குறியாகலாம்.

ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை

எனவே, உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசர பயன்பாட்டு பட்டியலில் (EUL) பாரத் பயோடெக்கின் கோவாக்சின் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இது தொடர்பாக, பாரத் பயோடெக் நிறுவனம், பெரும்பாலான ஆவணங்களை சமர்பித்துள்ள நிலையில், WHO கூடுதல் ஆவணங்களை கோரியுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கான பட்டியலில் கோவிசின் தடுப்பூசியை பட்டியலிடுவதற்கு நிறுவனம் கூடுதல் தகவல்களை கோரியுள்ளது. 

அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் தடுப்பூசியை பட்டியலிடுவதற்காக ஏற்கனவே 90 சதவீத ஆவணங்களை உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக, பாரத் பயோடெக் நிறுவனம் (Bharat Biotech) மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள ஆவணங்கள் ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, ஆவணங்கள் ஆராயப்பட்டு, முடிவெடுக்கப்படும்.

இது தொடர்பான WHO கூட்டம் 2021 மே-ஜூன் மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிப்பீட்டிற்கான அளவுகோல்களை பூர்த்தி செய்தால், பட்டியலில் கோவேக்ஸின் சேர்க்கப்படும் 

ALSO READ | சமூக ஊடகங்களில் ‘இந்திய திரிபு’ என குறிப்பிடும் பதிவுகளை நீக்க வேண்டும்: மத்திய அரசு

 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News