சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது
Sanjay Raut Arrest : சிவசேனா கட்சியின் மூத்த உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்தை, மும்பையில் வைத்து அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் குரேகான் பகுதியில் உள்ள பத்ரா சால் பகுதியில், 600-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பத்ரா சால் மேம்பாட்டு திட்டத்தில் ஆயிரத்து 34 கோடி ரூபாய்க்கு நில மோசடி நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், அவரது மனைவி வர்ஷா ராவத், சஞ்சய் ராவத்திற்கு நெருங்கிய தொடர்புடையவர்களான பிரவீன் ராவத், சுஜித் பட்கர் ஆகியோரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பிரவீன் ராவத், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த ஒன்றாம் தேதி சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறையினர் சுமார் 10 மனி நேரம் விசாரணை மேற்கொண்டனர். கடந்த ஏப்ரல் மாதம், சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் உட்பட 3 பேரின் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
மேலும் படிக்க | டெல்லியின் புதிய காவல் ஆணையாளராக சஞ்சய் அரோரா நியமனம்
இது தொடர்பான விசாரணைக்காக அமலாக்கத்துறை 2 முறை சம்மன் அனுப்பியும் சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, இன்று காலையில் இருந்து சுமார் 9 மணி நேரம் சஞ்சாய் ராவத்தின் வீட்டில் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர், சஞ்சய் ராவத்தை கைது செய்தனர்.
அண்மையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏற்பட்ட கிளர்ச்சியினால் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், சஞ்சய் ராவத் உத்தவ் தாக்கரேவிற்கு ஆதரவாக உள்ளார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அரசியல் பழிவாங்கல் காரணமாக தான் குறிவைக்கப்படுவதாகவும் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
பொய்யான ஆதாரங்களைக் கொண்டு தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரே போனாலும் சிவசேனாவை விட்டு விலக மாட்டேன், சரணமடைய மாட்டேன் எனவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ