கொரோனாவுக்குப் பிறகு ஹோட்டல்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. ஆன்லைன் பார்சல் சர்வீஸ் நிறுவனங்களான சொமோட்டோ மற்றும் ஸ்விகி நிறுவனங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்துவிடுகின்றன. இதனால், வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதால் மக்களும் இதனை பயன்படுத்திக் கொள்கின்றன. இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. பார்சல் உணவுகளில் பழைய கறி அல்லது சாப்பாட்டை சூடாக்கி கொடுத்துவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அசாம் மக்களை பலி வாங்கும் காட்டு காளாண்கள்! என்ன காரணம்?


இந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, கேரளாவில் ஆர்டர் செய்த உணவு பார்சலில் உணவுடன் பாம்புத் தோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாம்புத் தோலை பார்த்தவுடன் உணவை ஆர்டர் செய்த குடும்பத்தினர் திகைத்துபோயினர். திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்துக்கு தான் இப்படியான சம்பவம் நடந்துள்ளது. நெடுமங்காடு பகுதியில் வசிக்கும் அவர்கள் மே 5 ஆம் தேதி ஷாலிமார் ஹோட்டலில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளனர். 


உணவு வரும் வரை காத்திருந்த அவர்களுக்கு பார்சலை பிரித்து பார்த்தவுடன் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பார்சலில் பாம்புத் தோல் இருந்துள்ளது. உடனடியாக போலீஸில் புகார் அளித்த குடும்பத்தினர், ஹோட்டல் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். அவர்களது புகாரின் அடிப்படையில் ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து ஹோட்டல் உடனடியாக பூட்டப்பட்டது. மேலும், ஹோட்டலை முழுமையாக சுத்தம் செய்த பிறகே திறக்க வேண்டும் என கண்டிப்புடன் ஹோட்டல் உரிமையாளருக்கு உத்தரவு பிறக்கப்பட்டது. 


மேலும் படிக்க | என்ன சரக்கு இது... போதையே ஏறலை... உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்த மதுப்பிரியர்


இதற்கிடையே, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அந்த ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் உணவு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதையும் உறுதி செய்தனர். சமையல் செய்யும் இடத்தில் குப்பைகள் குவிந்திருந்துள்ளன. முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருந்துள்ளது. இது தொடர்பாகவும் ஹோட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் விசாரணை வளையத்தில் அந்த ஹோட்டல் இருப்பதால், சீல் வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR