யூனியன் பட்ஜெட் 2018: பட்ஜெட் குறித்து சில முக்கிய குறிப்புகள்
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை(பிப்ரவரி 1) தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாளை(பிப்ரவரி 1) தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பட்ஜெட் என்ற வாரத்தை எப்படி நடைமுறைக்கு வந்தது. முதல் பட்ஜெட் எப்பொழுது தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் மட்டும் பட்ஜெட் தாக்கல் செய்தாரா? அல்லது வேறு யாராவது தாக்கல் செய்தார்களா? என்று பார்ப்போம்.
பட்ஜெட் குறித்து சில குறிப்புகள்:-
> பட்ஜெட் என் என்ற வாரத்தை லத்தின் மொழியில் இருந்து உருவானது.
> முதலில் ஒரே பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. 1924-ம் ஆண்டு முதல் பொது பட்ஜெட்டில் இருந்து ரயில்வே பட்ஜெட் தனியாகப் பிரிக்கப்பட்டது.
> இந்தியாவில் முதல் பட்ஜெட் ஆங்கிலேயர் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது நிதியமைச்சராக இருந்த ஜேம்ஸ் வில்சன் இந்தியாவுக்கான முதல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
> இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, நாட்டின் முதல் நிதியமைச்சராக ஆர்.கே. சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். அவர் தான் சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
> இந்தியாவில் மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்.
>அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் 8 முறை பட்ஜெட்களை தாக்கல் செய்துள்ளார்.
> இந்தியாவில் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த பெண்மணி இந்திரா காந்தி ஆவார். அவர் காங்கிரஸ் ஆட்சியின்(1970-71) பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தகது.
> பொது பட்ஜெட் மற்றும் ரயில் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்பட வந்த பட்ஜெட்டை மோடி தலைமையிலான மத்திய அரசு இரு பட்ஜெட்டையும் ஒன்றாக இணைத்து பொது பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது.
> அதேபோல பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நேரம், காலம் போன்றவையும் மாற்றி அமைக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட் நேரத்தை கடந்த 1998-ம் ஆண்டு முதல் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
> மேலும் பிப்ரவரி கடைசி வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யும்படி மோடி தலைமையிலான மத்திய அரசு மாற்றி அமைத்தது.
> தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 5-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
> மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு கடைசி பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால், இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.