Sonia Gandhi in Udaipur: காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடி அரசு மற்றும் பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து பேசிய சோனியா காந்தி, "ஒரு பெரிய கூட்டு முயற்சிகள் மூலம் காங்கிரஸில் புதிய சிந்தனையை புகுத்த வேண்டும்" என்று கட்சியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸை வலுப்படுத்த தொண்டர்களுக்கு அழைப்பு:
புதிய உறுதியுடன் வெற்றிக்கான பாதையை கண்டறிவதே சிந்தனை அமர்வின் முக்கிய அம்சமாகும் என்றார். காங்கிரஸ் கட்சி நம் அனைவருக்கும் நிறைய கொடுத்துள்ளது. அக்கடனை கட்சிக்கு திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் இது. மாற்றம் மிகவும் முக்கியமானது. அமைப்புக்கு முன் உங்கள் தனிப்பட்ட நலன்களை விட்டுவிட வேண்டும். நாட்டு மக்கள் மீண்டும் காங்கிரஸிடம் பெரும் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர், அவற்றை நிறைவேற்றி காட்ட வேண்டும் என்றார்.  ஒவ்வொரு நிறுவனமும் வாழ்வதற்கு மட்டுமல்ல, வளரவும் அவ்வப்போது மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். சீர்திருத்தங்கள் மிகவும் தேவைப்படுகின்றன என காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துமாறு கட்சித் தொண்டர்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


மேலும் படிக்க: இனவாத பதட்டத்தை மோடி அரசு தவிர்க்க வேண்டும் - எச்சரிக்கும் மெகபூபா முப்தி


பாஜக மகாத்மா காந்தியின் கொலையாளிகளை மகிமைப்படுத்துகிறது:
பாஜக மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) முன்வைத்துள்ள சவால்கள் குறித்து விவாதிக்க சிந்தனை அமர்வு கூட்டம் ஒரு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது என்றுக்கூறிய சோனியா காந்தி, ​​மோடி அரசை கடுமையாக தாக்கி பேசினார். இன்று நாடு முழுவதும் முஸ்லிம்கள் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். நாட்டில் அவர்களும் சமமான குடிமக்கள், அவர்களுக்கும் சம உரிமை உண்டு. இன்று நலிந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தலித்துகள் தண்டிக்கப் படுகிறார்கள் என்றார். ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்போர் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைக் குறைப்பது மற்றும் மகாத்மா காந்தியின் கொலையாளிகளை மகிமைப்படுத்துவது தான் பாஜகவின் செயலாக உள்ளது எனக் கடுமையாகச் சாடினார். 


பாஜகவால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்:
சோனியா காந்தி, "நாட்டில் முன் எப்போதும் இல்லாத சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இன்று நாடு வேறுவிதமான நிலையில் உள்ளது. இன்று அரசியலமைப்பு நிறுவனங்கள் முன் பெரும் ஆபத்து எழுந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றார். 


மேலும் படிக்க: ராமரை தரிசிக்க வேண்டுமா? வட இந்தியர்களிடம் ராஜ் தாக்கரே மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக எம்பி


மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி:
மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருவதாகவும் சோனியா காந்தி கூறினார். தங்களுக்கு வேலை கிடைக்காது என மக்கள் தற்போது நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றார். தனியார்மயமாக்கல் கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய சோனியா காந்தி, ஒருபுறம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, மறுபுறம், மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் விற்கப்படுகின்றன என்றார்.


இந்த பாசிஸ்டுகள் மதத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தனர்:
காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டத்தில் பேசிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், "பாஜகவுக்கு ஜனநாயகம் முக்கியமில்லை. இப்படிப்பட்ட பாசிஸ்டுகள் மதத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தனர் என்று கூறிய அவர், பிரதமர் மோடியை குறிவைத்து, சமீபத்திய வகுப்புவாத மோதல் சம்பவங்களை மேற்கோள் காட்டி, "நாட்டில் அமைதிக்காக முறையிடும் தார்மீக தைரியத்தை பிரதமர் நரேந்திர மோடியால் மேற்கொள்ள முடியவில்லை "ஆம்.. அவர்களுக்கு தார்மீக தைரியம் இல்லை" எனக் கெலாட் கூறினார், "நாங்கள் மக்களுக்காக வேலை செய்கிறோம், நாங்கள் மார்க்கெட்டிங் செய்யவில்லை. ஆனால், இந்த பாசிசவாதிகள் எதுவும் செய்யவில்லை, வெறும் பிரசங்கம் மட்டுமே செய்கின்றனர்" எனவும் கூறினார்.


மேலும் படிக்க: பிரதமர் மோடி மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்: அமித் ஷா புகழாரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR