சோனியா காந்தி தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். த்தொகுதியில் சோனியாகாந்தி, 2004, 2006, 2009, 2019 என 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.


இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4 கோடியே 29 லட்சம். ரொக்கமாக ரூ.60 லட்சமும், வங்கியில் டெபாசிட்டாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரமும் இருக்கிறது. மேலும் ராகுல் காந்திக்கு கடனாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.