சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி
Sonia Gandhi Hospitalized:டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Sonia Gandhi Hospitalized: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனவும் தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.
76 வயதான சோனியா காந்தி தற்போது தான் சில நாள்களுக்கு ஜம்மு காஷ்மீர் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பினார். கடந்த செப். 1ஆம் தேதி மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்றார். அவர் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்வானார்.
இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதேபோல், இந்தாண்டு ஜனவரி மாதமும், வைரஸ் சுவாச நோய்த்தொற்றுக்கு சிகிச்சைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மேலும் படிக்க | ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்: சி.பி.ராதாகிருஷ்ணன்
2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் தோல்வியடைந்ததை அடுத்து, அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனால், சோனியா காந்தி அக்கட்சியின் இடைகால தலைவராக பொறுப்பேற்றார். இடைகால தலைவர் என்றாலும், அவருக்கு மாற்றாக கடந்தாண்டு தான் முழுநேர தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், கார்கே வெற்றி பெற்று, கடந்த அக்டோபர் மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று வருகிறார். சோனியா காந்தி தலைவர் பதவியை விரும்பாவிட்டாலும், இன்றும் தீவிர அரசியலில் தொடர்ந்து இயங்கி வருபவராக இருக்கிறார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற மிகப்பெரும் வெற்றி, இந்திய அளவில் அக்கட்சிக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது. மேலும், அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. எனவே, வலுவான பாஜகவை எதிர்க்கும் முனைப்பில் பல்வேறு எதிர்க்கட்சிகளை இணைத்து 'இந்தியா' என பெயரிடப்பட்ட கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்து வருகிறது. இது மக்களவை தேர்தலுக்கு மட்டுமின்றி இந்தாண்டு நடைபெற உள்ள நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், 'இந்தியா' கூட்டணியை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய கண்ணியாக சோனியா காந்தி உள்ளார். மேலும், இந்த தேர்தலுடன் அவர் தீவிர அரசியலில் இருந்து விடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தாண்டு இத்தோடு மூன்றாவது முறையாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, அடுத்து வரும் மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு குறைவு தான்.
மேலும் பிடிக்க | ஸ்லீப் மோடுக்கு சென்ற ரோவர்... முடிந்ததா பிரக்யானின் வேலை - இஸ்ரோ சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ