மகாராஷ்டிராவின் வார்தாவில் உள்ள சேவாகிராமில் உணவு உண்ட பிறகு தங்களது தட்டுக்களை ராகுல், சோனிய காந்தி சுந்தம் செய்த சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிராவின் வார்தாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை தாங்களே சுத்தம் செய்துள்ளனர். மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து இருவரும் தங்களது தட்டுக்களை சுத்தம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.



தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள சவக்ராம் ஆசிரமத்தில் ஏற்படு செய்யப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி இருவரும் சென்று இருந்தனர்.  


இந்த பிராத்தனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், புதுச்சேரி முதலமைச்சர் V நாராயணசாமி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், சுஷில் குமார் ஷிண்டே, ஏ.கே.அந்தோனி, முன்னாள் அரியானா முதலமைச்சர் பி.எஸ். ஹூடா மற்றும் முன்னாள் உத்தரகண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோர் இந்த பிராத்தனை கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.


இதற்கிடையில் மதிய உணவு உண்ட பின்னர் தங்களது தட்டுக்களை ராகுல், சோனிய காந்தி சுந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி, தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான மறைந்த தலைவர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவாக இந்த ஆசிரமத்தில் மரகன்று ஒன்றை நாட்டார்.