காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இத்தொகுதியில் சோனியாகாந்தி, 2004, 2006, 2009, 2019 என 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், தற்போது 5-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.



 இத்தொகுதியில் அவரது வெற்றியை உறுதி செய்யும் வகையில், ஐந்தாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடும் சோனியாவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. 


வேட்புமனு தாக்கல் செய்ய ரே பரேலி சென்றுள்ள சோனியா காந்தி இன்று பேரணியில் உரையாற்றுகிறார். இத்தொகுதிக்கு 5 ஆம் கட்டமாக மே 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். சோனியா காந்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார். ரேபரேலி தொகுதிக்கு 5-ஆம் கட்டமாக மே மாதம் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.