கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியாவை சந்திக்கும் சோனியா காந்தி!
மத்திய பிரதேசத்தில் கட்சியின் தலைவராக யார் இருப்பார்கள் என்பது குறித்து காங்கிரசுக்குள் ஏற்பட்ட உள் மோதலுக்கு இடையே, சோனியா காந்தி புதன்கிழமை (செப்டம்பர் 11) கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் கட்சியின் தலைவராக யார் இருப்பார்கள் என்பது குறித்து காங்கிரசுக்குள் ஏற்பட்ட உள் மோதலுக்கு இடையே, சோனியா காந்தி புதன்கிழமை (செப்டம்பர் 11) கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கமல்நாத் மற்றும் சிந்தியா ஆகிய இருவரின் ஆதரவும் உள்ள ஒருவர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராவதற்கு சோனியா விரும்புகிறார் என்று கூறப்படுகிறது.
கட்சிக்குள்ளான வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக, முதலில் செவ்வாயன்று (செப்டம்பர் 10) சிந்தியாவைச் சோனியா சந்திப்பார் என கூறப்படுகிறது. சிறந்த வேட்பாளர் குறித்த அவரது விருப்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியில் இந்த சந்திப்பு நிகழவுள்ளது.
சிந்தியா தானும் இந்த தலைவர் போட்டியில் இருக்கிறார், ஆனால் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான திக்விஜயா சிங் வெளிப்படையாக அவரை எதிர்க்க சற்று விலகி இருக்கின்றார். மாநில முதல்வர் கமல்நாத் அவர்களுக்கும் கட்சித் தலைவராவதற்கு ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவருக்கான போட்டி சூடுபிடித்திருக்கும் இந்நிலையில்., பல காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் கமல் நாத் உடனான சந்திப்பில், தற்போது மத்திய பிரதேசத்தில் நிலவும் பல்வேறு ஒழுக்காற்று பிரச்சினைகள் குறித்து சோனியா விவாதித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், “நாங்கள் மத்திய பிரதேசத்தின் அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். மாநிலத்தில் ஒழுக்கமற்ற பிரச்சினைகள் குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் காங்கிரஸ் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் ஏ.கே. ஆண்டனிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. புகார் உள்ள எவரும் அவரை அணுகலாம்.” என குறிப்பிட்டிருந்தார்.