முன்னாள் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் டாம் வடக்கன், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 


இந்நிலையில் காங்கிரஸின் முக்கிய புள்ளி ஒருவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸில் 20 ஆண்டுகாலம் பணியாற்றிய முன்னாள் காங்கிரஸ் செய்திதொடர்பாளர் டாம் வடக்கன் பாஜகவில் இணைந்துள்ளார். 


1990ஆம் ஆண்டில் முதல்முறையாக காங்கிரசுக்கென்று ஊடகப் பிரிவு உருவாக்கப்பட்ட போது அதில் இடம்பிடித்தவர் டாம் வடக்கன். தற்போது அவர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில், டெல்லியில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.