விரைவில்!! பசுக்களுக்கு ஆதார் அடையாள அட்டை
பசுக்களுக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டம் கூடிய விரைவில் வருகிறது.
கடந்த வருடமும் பசுக்களுக்கு ஆதார் அடையாள அட்டை என்ற நகர்வானது கேளிக்கை மற்றும் விமர்சனத்திற்கு உள்ளாகியது, இப்போது மத்திய அரசு உயர்மட்ட அளவில் இவ்விவகாரத்தை தெளிவு செய்து உள்ளது.
பசு பாதுகாப்பு மற்றும் இந்தியா - வங்காளதேசம் எல்லையில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்து உள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து பசுக்களுக்கும் அடையாள அட்டையை தயாரிப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்க தலைமை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இடம்பெற்ற கமிட்டியானது அமைக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பசுக்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையிலும் வயது, இனம், பாலினம், இருப்பிடம், உயரம், அங்க அளவுகள், நிறம், கொம்புகளின் ரகம், வால் மற்றும் பசுவின் சிறப்பு அடையாளம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
அனாதையாக விடப்படும் விலங்குகளை பராமரிக்க வேண்டியது மாநில அரசுக்களில் பொறுப்பாகும், மாவட்டம் தோறும் உரிமையாளர்களால் கைவிடப்படும் சுமார் 500 பசுக்களுக்கு இருப்பிடம், உணவு மற்றும் பிற வசதிகளை செய்துக் கொடுக்க மத்திய அரசு சிறப்பு கூடம் அமைத்து கொடுக்கும். மாநில அரசுக்களும் இந்த பசுக்களுக்கு செலவு செய்யப்படும் தொகையை வழங்கவேண்டும் எனவும் கமிட்டி கருத்து தெரிவித்து உள்ளது.
பசுக்கள் பால் கறவை காலம் முடிந்ததும் சிறப்பாக பராமரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் பசுவின் பால் கறவை காலம் முடிந்ததும் அவற்றை விற்பனை செய்யவதை தவிர்க்கவும் அறிவுரை வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதுமட்டும் கிடையாது,
கடத்தப்பட்டதாக கருதப்படும் பசுக்களை எளிதான முறையில் கண்டுபிடிக்க அனைவரும் தகவல் தெரிவிக்கும் வகையில் 24 மணிநேரமும் செல்படும் வகையில் இலவச உதவி எண்களும் அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.
தகவல்களின்படி இந்தியாவில் மட்டும் 47 மில்லியன் உள்நாட்டு மற்றும் கலப்பின பசுக்கள் உள்ளது. அனைத்து பசுக்களும் 12 இலக்க எண்களை கொண்ட ஒரு அடையாள எண்ணை கொண்டு இருக்கும், இதனை கொண்டு அரசு அவற்றின் நகர்வு மற்றும் உற்பத்தி திறனை கண்டுபிடிக்க முடியும்.