விரைவில், மெட்ரோ ரயில்களை போல் மாறுகிறது IRCTC வண்டிகள்!
மெட்ரோ ரயில்களில் இருப்பது போல் தொடர்ச்சியான கண்ணாடிச் ஜன்னல்கள் கொண்ட ரயில் பெட்டிகளை தயராக்க Integral Coach Factory(ICF) திட்டமிட்டுள்ளது!
மெட்ரோ ரயில்களில் இருப்பது போல் தொடர்ச்சியான கண்ணாடிச் ஜன்னல்கள் கொண்ட ரயில் பெட்டிகளை தயராக்க Integral Coach Factory(ICF) திட்டமிட்டுள்ளது!
குளிர்சாதன வசதிகளுடன் கூடிய ரயில் பெட்டிகளை தயாரிக்க ICF திட்டமிட்டுள்ளது. இந்த பெட்டிகளில் மெட்ரோ ரயில்களில் இருப்பது போன்று இடைவெளிகள் அற்ற தொடர் கண்ணாடி ஜன்னல்கள் கொண்டு பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள இந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளது.
இவை உள்நாட்டில் ரயில்களில் பயன் படுத்தப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முழுவதும் துருப்பிடிக்காத இரும்பு கொண்ட தீப்பிடிக்காத ரயில்பெட்டி, உயிரிக் கழிப்பறை கொண்ட பெட்டி, LHP பெட்டி எனக் காலத்துக்கேற்பப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது தொடர்ச்சியான கண்ணாடிச் ஜன்னல்கள் கொண்ட புதிய குளிர்சாதனப் பெட்டிகளைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!