உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்காக ஒரு கோயில் கட்டப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநில பொதுப்பணித்துறையான நீர்ப்பாசனத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜே.பி.சிங், இந்த கோயிலை கட்டுகிறார். இவர் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் ஆவார். மோடியின் கோயிலை குறித்து அவர் கூறியதாவது:-


பிரதமர் மோடியின் சாதனைகளை பாராட்டும் வகையில் கோயில் கட்டப்படுகிறது. அதற்காக சுமார் 5 ஏக்கர் நிலம் மீரட் மாவட்டத்தில் வாங்கி உள்ளேன். 100 அடி உயரத்தில் பிரமாண்ட சிலையுடன் கூடிய கட்டப்பட உள்ளது. இந்த கோயிலை சுமார் 2 வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை வரும் 23-ம் தேதி  நடைபெறும் எனக் கூறினார்.